குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் "லாலு பிரசாத் யாதவ்.." அங்கதான் ட்விஸ்ட்!
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் உட்பட 11 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ளனர்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக தீவிரம்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

எதிர்க்கட்சிகள் கூட்டம்
இந்த நிலையில் நேற்று மம்தா பானர்ஜி நடத்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், திமுக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றன. இதில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்த பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர் அதற்கு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். எனவே மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், கடந்த முறை குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டவருமான கோபாலகிருஷ்ண காந்தியை குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க எதிர்க்கட்சிகள் விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வேட்பு மனுத்தாக்கல்
இதற்கிடையே குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 11 பேர் தங்கள் வேட்புமனுவை மாநிலங்களவை தலைமை செயலாளரிடம் தாக்கல் செய்தனர். இவர்கள் தமிழ்நாடு, டெல்லி, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். மேலும் ஒருவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெருவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

லாலு பிரசாத் யாதவ்
இதில் கூடுதல் சுவரஸ்யமான தகவல் என்னவென்றால் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் பெயர் கொண்ட நபரும் இதில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அவர் பீகார் மாநிலம் சரன் பகுதியை சேர்ந்தவர். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ், கால்நடை தீவன மோசடி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications