செம டேஸ்ட்.. ராகுல் காந்திக்கு "மட்டனை" கைப்பட சமைத்து பரிமாறிய லாலு பிரசாத் யாதவ்.. ருசிகரம்!
டெல்லி: "இந்தியா" கூட்டணியில் பல சந்திப்புகள் நடந்து வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் இரவு விருந்தில் சந்தித்துள்ளனர்.
"மோடி" பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நேற்று ராகுல் காந்திக்கு சாதகமான உத்தரவைப் பிறப்பித்தது. ராகுல் காந்திக்கு வழங்கிய தண்டனையை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டது ஏன் என்று விளக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த வழக்கால் ராகுல் காந்தி தனது எம்பி பதவியை இழந்திருந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பைத் தொடர்ந்து அவர் மீண்டும் தனது எம்பி பதவியைப் பெற்றார். இது காங்கிரஸ் கட்சியினருக்கு மிகப் பெரிய நிம்மதியைக் கொடுத்தது.
ராகுல் காந்தி: இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்குச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது நாடாளுமன்றத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், அவர் விரைவில் லோக்சபா செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே இந்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து சில மணி நேரம் கழித்து ராகுல் காந்தி இரவு விருந்து ஒன்றில் கலந்து கொண்டார். பீகாரின் ஆர்ஜேடி கட்சித் தலைவர்கள் கொடுத்த இரவு விருந்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.
ராகுல் காந்தியைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற லாலு பிரசாத் யாதவ், அவரை கட்டி தழுவி வரவேற்றார். அதன் பிறகு வகை வகையாகச் சமைக்கப்பட்ட இரவு உணவுகள் ராகுல் காந்திக்கு பரிமாறப்பட்டது. இந்த இரவு விருந்தில் ஹைலைட்டே மட்டன் தான். இதனை ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவே தனது கைப்பட சமைத்து ராகுல் காந்திக்கு பரிமாறியுள்ளார்.

சந்திப்பு: டெல்லியில் உள்ள ஆர்ஜேடி எம்பி மிசா பார்தியின் டெல்லி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இந்த முக்கிய சந்திப்பின் போது பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் உடன் இருந்துள்ளார். இந்த மாதம் இறுதியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான "இந்தியா" மும்பையில் சந்திக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பில் அரசியல் தான் அதிகமாக இருந்துள்ளது. அடுத்து வரும் லோக்சபா தேர்தல் குறித்தும் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்துமே ராகுல் காந்தியும் லாலு யாதவும் அதிகம் பேசியுள்ளனர். அதையும் தாண்டி மற்ற விஷயங்கள் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் இருவரும் சற்று நேரம் பேசியுள்ளனர்.
மட்டன்: இந்த மீட்டிங்கில் லாலு பிரசாத் யாதவ் தானே கைப்பட சமைத்துள்ளார். பீகார் ஸ்டைலில் லாலு சமைத்த இந்த மட்டனை ராகுல் காந்தி விரும்பி சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ராகுல் காந்திக்கு மட்டனை பீகார் ஸ்டைலில் சமைப்பது எப்படி என்று விளக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகாரின் சம்பரன் மட்டன் அதன் தனித்துவமான சமையல் பாணி மற்றும் சுவைகளுக்குப் பெயர் பெற்றதாகும்.

மேலும், இந்தச் சந்திப்பின் போது லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை குறித்தும் ராகுல் காந்தி கேட்டறிந்தார். பீகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை கூடச் செய்யப்பட்டது. பொது நிகழ்ச்சிகளில் இருந்து தள்ளியே இருந்த ராகுல் காந்தி இப்போது தான் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் மீண்டும் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications