டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹைதராபாத் கடைசி நிஜாம் முக்காரம் ஜா மரணம்! 1000 கோடி வைரத்தை பேப்பர் வெயிட்டாக பயன்படுத்திய குடும்பம்

Google Oneindia Tamil News

டெல்லி: ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் என்று அழைக்கப்பட்ட மீர் பர்காத் அலி கான் இஸ்தான்புல் நகரில் இன்று காலமானார். அவரது உடல் ஹைதராபாத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மீர் பர்காத் அலி கான் துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் வசித்து வந்தார். முக்காரம் ஜா பகதூர் என்று அழைக்கப்பட்டு வந்த இவர் தான் ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் ஆவர்.

இஸ்தான்புல் தலைநகரில் வசித்து வந்த இவர் கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 89 ஆகும்.. இவர் ஐதராபாத்தின் ஏழாம் நிஜாம் என அழைக்கப்படும் மீர் உஸ்மான் அலி கானின் பேரன் ஆவர்.

பண பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறும் போட்டியாளர்.. இணையத்தில் வெளியான தகவல்கள் பண பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறும் போட்டியாளர்.. இணையத்தில் வெளியான தகவல்கள்

கடைசி நிஜாம்

கடைசி நிஜாம்

தான் இறந்த பிறகுத் தனது உடலைத் தாய்நாட்டில் அடைக்க வேண்டும் என்பதே இவரது கடைசி ஆசை. இதனால் அவரது உடலை ஹைதராபாத்தில் அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக அவரது உடலுடன் அவரது குடும்பத்தினர் இன்று துருக்கியில் இருந்து ஹைதராபாத் வருகிறார்கள். இங்கு வந்ததும் அவரது உடல் முதலில் சௌமஹல்லா அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்குச் சடங்குகள் செய்யப்பட்ட பிறகு, அவரது உடல் ஆசஃப் ஜாஹி என்ற இடத்தில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்படுகிறது.

அரசு மரியாதை

அரசு மரியாதை

மீர் பர்காத் அலி கானின் மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர், தெலங்கானா முதல்வர் கேசிஆர், ஏழைகளுக்குக் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சமூக சேவை செய்த மீர் பர்காத் அலி கானுக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். மீர் பர்காத் அலி கான் கடந்த 1933 அக். 6ஆம் தேதி அப்போதைய ஹைதராபாத் சமஸ்தானத்தில் பிறந்தவர்.. இவரது தந்தை ஆசம் ஜா என்பவர் ஆவர். ஜாவுக்கு 4 மனைவிகள் மற்றும் 5 குழந்தைகள் உள்ளனர்.

ஹைதராபாத் இளவரசர்

ஹைதராபாத் இளவரசர்

இவது தாய் துருக்கி நாட்டின் கடைசி சுல்தான் ஒட்டாமன் பேரரசின் அப்துல் மஜித் என்பவரின் மகள் துர்ரே ஷெவார் என்பவர் ஆவர். இவர் 2000 களின் தொடக்கத்தில் இறந்தார். இவரது மகன் மீர் பர்காத் அலி கான் தான் இப்போது காலமானார். இவர் ஹைதராபாத்தின் எட்டாவது மற்றும் கடைசி நிஜாம் எனச் சொல்லப்படுகிறது. 1971ஆம் ஆண்டில் மன்னர் குடும்ப பதவிகள் மற்றும் மானியங்களை இந்தியா ரத்து செய்யப்படும் வரை அதிகாரப்பூர்வமாக இவர் ஹைதராபாத் இளவரசர் என்றே அழைக்கப்பட்டார்.

உலகின் பெரும் பணக்காரர்

உலகின் பெரும் பணக்காரர்

இப்போது உயிரிழந்த மீர் பர்காத் அலி கானின் தாத்தா மீர் உஸ்மான் அலி கான் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஆவார்.. அந்த சமயத்தில் உலகின் மிக பெரிய பணக்காரராக அவர் இருந்துள்ளார். தற்போதைய மதிப்பில் மீர் உஸ்மான் அலி கானின் சொத்து மதிப்பு 236 பில்லியன் டாலர் (19 லட்சம் கோடி ரூபாய்) என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் 1967இல் தனது 80 வயதில் காலமானார். அவரது சொகுசு வாழ்க்கை அப்போதே ஒட்டுமொத்த நாடும் வியக்கும் வகையில் இருந்தது.

ரூ. 1,000 கோடி மதிப்புள்ள வைரம்

ரூ. 1,000 கோடி மதிப்புள்ள வைரம்

அவர் சில்வர் கோஸ்ட் த்ரோன் கார் உட்பட பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்தார். மேலும் தற்போது ரூ. 1,000 கோடி மதிப்புள்ள வைரத்தை பேப்பர் வையிட்டாக பயன்படுத்தினர். 40 கிராம் எடை கொண்ட இந்த வைரத்தை 1995ஆம் ஆண்டு நிஜாம் அறக்கட்டளையிடம் இருந்து 13 மில்லியனுக்கு இந்திய அரசு வாங்கியது. இப்போது இந்த வைரம் மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Last Nizam of Hyderabad Muqaram Jah's family used 1000 crore diamond as paper weight: Hyderabad last nizam Mir Barqat Ali Khan passed away.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X