கரும்புள்ளியாய் தொடரும் தேசத்துரோக சட்டப்பிரிவு 124ஏ! ரத்து செய்ய கூடாது என சட்ட ஆணையம் வலியுறுத்தல்
டெல்லி: நாடு சுதந்திரமடைந்து முக்கால் நூற்றாண்டு ஆகியுள்ள நிலையில், காலணியதுவத்தின் எச்சமாக இருக்கும் 'தேசத்துரோக' சட்டப்பிரிவு 124ஏ தேவையா? என்று கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் இந்த சட்டம் தேவைதான் என்று சட்ட ஆணையம் கூறியுள்ளது.
கடந்த 1947ம் ஆண்டு நாடு சுதந்திரமமைடந்த பின்னரும், ஆங்கிலேயர்கள் விட்டு சென்ற ஏராளமான எதிர்மறையான விஷயங்கள் இன்னும் நம்முடன் தொடர்ந்துதான் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமானது தேசத்துரோக சட்டம். இந்த சட்டத்தின் 124ஏ பிரிவு கருத்துரமையை நசுக்குவதாக சமூக செயற்பாட்டாளர்கள், எதிர்க்கட்சியினர் உள்ளிட்டோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இதனை நீக்குவது தொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகளை தொடுத்திருக்கின்றனர்.

இதனையடுத்து கடந்த 2021ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில், இந்த சட்டப்பிரிவு வேண்டுமா? என்றும் கேள்வியெழுப்பியிருந்தது. இதனையடுத்து மத்திய அரசு இதற்கு பதிலளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதில், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு இதுபோன்ற 1,500 சட்டப் பிரிவை நீங்கியுள்ளது. இதனால் சுமார் 25,000 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. அதேபோல இந்த 124ஏ சட்டப் பிரிவை நீக்குவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது" என்று கூறியிருந்தது.
இந்நிலையில், 22 சட்ட ஆணையத்தின் தலைவரும், கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியுமான ரிது ராஜா அஸ்வதி, தேசத்துரோக சட்டத்தின் பிரிவு 124ஏ கட்டாயம் தேவை என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் எழுதியுள்ளதாவது, "இந்திய தண்டனைச் சட்டத்தில் 124A பிரிவைத் தக்க வைத்துகொள்ள வேண்டும். இருப்பினும் இதில் சில திருத்தங்கள் அவசியமாகிறது.
அதாவது குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டுகளாக இருக்கிறது. அதேபோல அதிகபட்சமாக ஆயுள் தண்டனை இருக்கிறது. இதில் இந்த குறைந்தபட்ச தண்டனை அண்டுகளை ஒற்றைப்படையிலிருந்து இரட்டைப்படைகளாக மாற்ற வேண்டும். அல்லது 7 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும். இந்த சட்டத்தின் கீழ் பலர் தவறாக தண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை மறுக்க முடியாது. எனவே இதனை தடுக்க, தடுக்க மத்திய அரசு மாதிரி வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.
124ஏ சட்டப்பிரிவு 'காலனித்துவ மரபு' என்கிற ஒற்றை காரணத்திற்காகவே இதனை ரத்து செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒருவேளை இந்த சட்டப்பிரிவு இல்லாமல் போய்விட்டது எனில், அரசுக்கு எதிராக வன்முறையை தூண்டுபவர்களை கைது செய்ய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைதான் பயன்படுத்த வேண்டியிருக்கும். இது 124ஏ சட்டப் பிரிவைவிட கொடூரமானதாகும். மற்ற நாடுகள் இது போன்ற சட்டங்களை நீக்கிவிட்டது என்பதற்காக இந்தியாவும் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை.
மேலும், இப்படி செய்வது உண்மைக்கு புறம்பானதாக இருக்கும். மட்டுமல்லாது நீதிமன்றம் தனது பொன்னான நேரத்தில் இதில் செலவிட வேண்டாம்" என்று கூறியுள்ளார்.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications