Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனாதனத்தை அவமதிப்பதா? வக்கீல் அடாவடி! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது காலணி வீசி தாக்க முயற்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது தாக்குதல் முயற்சி நடைபெற்றுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயற்சித்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தலைமை நீதிபதி பி.ஆர் கவாய், இதுபோன்ற சம்பவங்கள் என்னை பாதிக்காது என்று கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பவர் பிஆர் கவாய். இன்று வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் பிஆர் கவாய் தலைமையில் நடந்தது. அப்போது வழக்கறிஞர் ஒருவர் திடீரென காலணியை கழற்றி பிஆர் கவாய் மீது வீச முயன்றார்.

lawyer-tried-to-attack-chief-justice-of-india-cji-br-gavai-in-the-supreme-court

பிடித்து இழுத்து சென்றனர்

கூச்சலிட்டபடி உச்சநீதிமன்ற நீதிபதியை நோக்கி காலணியை வழக்கறிஞர் ஒருவர் வீச முயற்சித்த நிலையில் அவரை காவலர்கள் பிடித்து இழுத்து சென்றுள்ளனர். இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அனைத்து மதங்களையும் மதிப்பவன் நான் என்றும் இதுபோன்ற செயல்கள் என்னை பாதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

விஷ்ணு சிலை புதுப்பிப்பு குறித்த வழக்கை விசாரித்த போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கறிஞர், இத்தகைய செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. சனாதனத்தை அவமதிப்பதா? என உச்ச நீதிமன்ற நீதிபதியை நோக்கி அந்த வழக்கறிஞர் கூச்சலிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

நேரில் பார்த்தவர்கள் கூறியது

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது:- தலைமை நீதிபதி இன்று காலை முதல் வழக்கை விசாரிக்க தொடங்கியதும், ஒரு முதியவர் திடீரென கோஷம் எழுப்பினார். சனாதனத்தை இழிவு செய்வதை இந்தியா சகித்துக்கொள்ளாது என்று கூறியபடி தனது காலில் அணிந்து இருந்த ஷூவை கழற்றி தலைமை நீதிபதி இருந்த அமர்வை நோக்கி வீசினார்.

ஷூவை வீசினார்

உடனடியாக அங்கு இருந்த பாதுகாவலர்கள், ஷூ வீசிய நபரை பிடித்து தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றனர். தலைமை நீதிபதியை நோக்கி வீசப்பட்ட ஷூ, பெஞ்ச் வரை செல்லவில்லை. அதற்கு முன்பாகவே கீழே விழுந்தது.

காலணியை வீசிய நபர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மற்றும், கிளர்க்குகளுக்கு அளிக்கப்படும் proximity card வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. அந்த அட்டையில் கிஷோர் ராகேஷ் என்று பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம் பாதுகாவலர்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.

அமைதியாக இருந்த தலைமை நீதிபதி

இந்தக் குழப்பங்களுக்கு மத்தியிலும், தலைமை நீதிபதி கவாய் அமைதியாக இருந்தார். அவர் அங்கிருந்த வழக்கறிஞர்களைப் பார்த்து, "இவற்றால் திசைதிருப்பப்பட வேண்டாம். நாங்கள் திசைதிருப்பப்படவில்லை. இவையெல்லாம் என்னை பாதிக்காது" என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

தாக்குதல் முயற்சி இருந்தபோதிலும், நீதிமன்ற நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்ந்தன. தலைமை நீதிபதி அங்கிருந்த அனைவரையும் அமைதியாகவும் கவனத்துடனும் இருக்கும்படி வலியுறுத்தினார்.

தாக்குதலுக்கு என்ன காரணம்?

கஜுராஹோவில் உள்ள 7 அடி உயர விஷ்ணுவின் உடைந்த சிலையை மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய வழக்கில் தலைமை நீதிபதி கவாய் அளித்த கருத்துக்களே இந்தச் சம்பவத்திற்குத் தூண்டுதலாக இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அந்த வழக்கை தள்ளுபடி செய்தபோது, அவர் கூறியதாவது:- "இப்போது சென்று தெய்வத்திடமே ஏதாவது செய்யச் சொல்லுங்கள். நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று சொல்கிறீர்கள். எனவே, இப்போதே சென்று பிரார்த்தனை செய்யுங்கள். அது ஒரு தொல்லியல் தளம், ஏ.எஸ்.ஐ அனுமதி கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மத உணர்வுகளை புண்படுத்தியதாக

இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் தலைமை நீதிபதி மத உணர்வுகளை புண்படுத்துவதாகக் குற்றம் சாட்டினர். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இன்று நீதிமன்றத்தில் இந்த விவகாரத்திற்கு விளக்கமளித்த பி ஆர் கவாய், "நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்.. நான் முன்பு கூறியவை சமூக வலைத்தளங்களில் திரித்து பரப்பப்பட்டுள்ளன" என்று தெளிவுபடுத்தினார்.

மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவும் தலைமை நீதிபதிக்கு ஆதரவு தெரிவித்தார். சம்பவங்களுக்கான எதிர்வினைகள் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் மிகைப்படுத்தப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். "நாம் இதைப் பார்த்திருக்கிறோம்.. ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்வினை உண்டு என்று நியூட்டனின் விதி கூறுகிறது. ஆனால் இப்போது ஒவ்வொரு செயலுக்கும் விகிதாசாரமற்ற சமூக ஊடக எதிர்வினை உள்ளது" என்று மேத்தா கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+