இப்போ குழந்தை வேண்டாம் ப்ளீஸ்! திடீரென கதறும் நிறைமாத கர்ப்பிணிகள்! பதறும் டாக்டர்கள்.. பரபர பின்னணி
டெல்லி: நமது நாட்டில் திடீரென பல பெற்றோர் குழந்தைகள் வேண்டாம் எனச் சொல்கிறார்களாம். அதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக பிப். மாதம் 28 நாட்கள் மட்டுமே இருக்கும். ஆனால், லீப் ஆண்டில் மட்டும் ஒரு நாள் கூடுதலாக 29 நாட்கள் இருக்கும். ஒரு நாள் கூடுதலாக வருவதால் அப்படி என்ன ஆகப் போகிறது என நீங்கள் கேட்கலாம்.

லீப் ஆண்டு என்றால் என்ன.. இதில் ஏன் ஒரு நாள் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். அதேநேரம் இந்த லீப் ஆண்டால் புது வித சிக்கலும் ஏற்பட்டுள்ளதாம். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
லீப் ஆண்டு: பூமி தன்னை தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருவது அனைவருக்கும் தெரியும்.. அதன்படி பூமி ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 365 நாட்கள் ஆகும். துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 365 நாட்கள், 5 மணி நேரம், 48 நிமிடங்கள், 46 வினாடிகள் ஆகும். நாம் பொதுவாக 365 நாட்களைத் தான் ஒரு ஆண்டாக எடுத்துக் கொள்வோம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் மீதமுள்ள சுமார் 5,48 மணி நேரம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் போகிறது.
இதன் காரணமாகவே 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் பிப். மாதம் கூடுதலாக ஒரு நாள் சேர்க்கப்படுகிறது. இதைத் தான் நாம் லீப் வருடம் என அழைக்கிறோம். நேரக் கணக்கீடு துல்லியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு. அப்படிப் பார்த்தாலும் 5.48 மணி நேரம் தானே வருகிறது. அதை எப்படி 6 மணி நேரமாக எடுத்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி உங்களுக்கு வரும்.
ரூல்ஸ்: இந்த பிரச்சினையைத் தீர்க்கும் ஒரு வழியை வைத்துள்ளார்கள். அதாவது 100 மூலம் வகுபடும் ஆண்டுகள்... அதாவது 1900, 2000, 2100 போன்ற ஆண்டுகள் 400ஆல் வகுபட வேண்டும். உதாரணமாக 1900ஆம் ஆண்டு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்தாலும், அவை இந்த விதியின் கீழ் 400ஆல் வகுபடாது. எனவே 1900 லீப் இயர் இல்லை. அதேபோல அடுத்து 2100ஆம் ஆண்டும் 400ஆல் வகுபடாது எனவே, அதுவும் லீப் இயர் இல்லை.
சரி விஷயத்திற்கு வருவோம்.. லீப் இயர் என்பது தனித்துவமான ஆண்டாக இருந்தாலும் கூட இந்த குறிப்பிட்ட நளில் பிறந்தால் பெரிய குழப்பம் தான். பிறந்த நாள் கொண்டாட்டம். முதல் ஒவ்வொரு இடத்திலும் குழப்பம் வரும். இதனால் இந்தியாவில் உள்ள பல பெற்றோர்கள் இன்று அதாவது லீப் நாளில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பவில்லையாம். எனவே, தங்களுக்குப் பிப்ரவரி 29 அன்று சிசேரியன் அறுவை சிகிச்சையைத் திட்டமிட வேண்டாம் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வந்த கோரிக்கை: ஒரு நாள் முன்னதாக அல்லது பின்னால் சிசேரியன் ஆப்ரேஷன் செய்யுமாறு அவர்கள் மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "சிசேரியன் பிரசவத்தின் தேதியை மாற்றுமாறு பல தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட விரும்புவதாகக் கூறுகின்றனர்.
பிப்ரவரி 29இல் குழந்தை பிறந்தால்.. ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளைக் கொண்டாட முடியாது. மேலும், பல குழப்பம் வரும் என அவர்கள் அஞ்சுகிறார்கள்" என்றார். ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்தே பிப். 29ஆம் தேதி டெலிவரி தேதியாக இல்லாத வகையில் இருக்குமாறு பல்வேறு ஜோடிகளும் கேட்டதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதனால் மருத்துவர்களும் அதற்கேற்ப திட்டமிட்டுள்ளனர். அதேநேரம் எமர்ஜென்சி என்றால் எந்தவொரு தாமதமும் இல்லாமல் ஆப்ரேஷன் செய்யப்படும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications