Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏஐ கத்துக்கோங்க.. இல்லைன்னா வேலை போயிடும்.. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட மைக்ரோசாஃப்ட்.. போச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியுள்ளது. மேலும், ஊழியர்களின் பணித்திறன் மதிப்பீட்டில் AI கருவிகளின் பயன்பாடு ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படும் என்றும் அறிவித்துள்ளது. அதாவது ஏஐ கற்றுக்கொள்ளுங்கள், அதை அதிகம் பயன்படுத்துங்கள், இல்லையென்றால் உங்கள் பணிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று அறிவித்து உள்ளது.

2025 ஜூலை மாதத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் மேலும் பணிநீக்கங்கள் வரவிருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் நிறுவனத்தின் உள் - செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட ஏஐயை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Wipro Microsoft jobs

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் புதிய அணுகுமுறை

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அதுமட்டுமின்றி, ஊழியர்களின் பணித்திறனை மதிப்பிடும்போது, இந்த AI கருவிகளின் பயன்பாடும் ஒரு காரணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள தகவலின்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது சொந்த AI சேவைகளை ஊழியர்கள் குறைவாக பயன்படுத்துவது குறித்து கவலை கொண்டுள்ளது. அதாவது தங்கள் ஊழியர்களின் பணிகளுக்காக நிறுவனம் உருவாக்கிய சொந்த ஏஐகளை ஊழியர்கள் பயன்படுத்துவது இல்லை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

எனவே, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட AI கருவிகளை ஊழியர்கள் பயன்படுத்துகிறார்களா என்பதை வைத்து அவர்களின் செயல்திறனை மதிப்பிடுமாறு மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெவலப்பர் பிரிவின் தலைவர் ஜூலியா லியூசன், ஊழியர்களுக்கு அனுப்பிய உள் மின்னஞ்சலில் "AI இப்போது நாம் பணிபுரியும் முறையில் ஒரு அடிப்படை பகுதியாக உள்ளது. டீம் வொர்க், சரியாக பணி செய்தல், நேரத்திற்கு வேலைக்கு வருதல், முறையான தகவல்தொடர்பு போன்றே, AI பயன்பாடும் இனி கட்டாயமான ஒன்று. இது எல்லா ஊழியர்களுக்கும் முக்கியமானது," என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஊழியர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் மதிப்பீட்டில் AI பயன்பாட்டை ஒரு காரணியாகக் கருத்தில் கொள்ளுமாறு மேலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதாவது ஹைக் வேண்டும் என்றால் அவர்கள் எந்த அளவிற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவன ஏஐயை பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட வேண்டும்.

இதுகுறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் சில, வரவிருக்கும் பணி மதிப்பாய்வுகளில் AI பயன்பாட்டிற்கான முறையான அளவீடுகளை அறிமுகப்படுத்த உள்ளனர். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குள் Copilot பயன்பாடு கோடிங் செய்வதற்கும், கோடிங் சோதனைகளை செய்வதற்கும், மற்ற பணிகளை செய்வதற்கும் பயன்படுத்தப்படும். ஏஐ மூலம் இயங்கும் இந்த செயலியை ஊழியர்கள் முறையாக பயன்படுத்துவது இல்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது ஊழியர்கள், குறிப்பாக AI தயாரிப்புகளை உருவாக்கும் ஊழியர்கள் கூட அதை சரியாக பயன்படுத்தாமல் , பழைய முறையிலேயே பணிகளை செய்கின்றனர் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

2025 ஜூலையில் மைக்ரோசாஃப்ட் பணிநீக்கங்கள்

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அடுத்த கட்ட பணிநீக்கம் 2025 ஜூலையில் நடைபெற வாய்ப்புள்ளது. ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, Xbox பிரிவில் ஆயிரக்கணக்கான வேலைகள் விரைவில் குறைக்கப்படலாம். இது நிறுவன அளவில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாகும். அதேபோல் கோடிங் பிரிவில் சீனியர் ஊழியர்கள் பலர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வரவிருக்கும் பணிநீக்கங்கள் மிக முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூன் மாதத்தில் மட்டும், மைக்ரோசாஃப்ட் 300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதற்கு முன் கடந்த 5 மாதங்களில் 6,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஒட்டுமொத்தமாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கடந்த சில மாதங்களில் 6,300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த நிலையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அடுத்த கட்ட பணிநீக்கம் 2025 ஜூலையில் நடைபெற வாய்ப்புள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+