அதிகாரத்தைக் கைப்பற்ற மிகப் பெரிய ஆயுதம் ஆங்கிலம் கற்பது..தடுக்குதே பாஜக, ஆர்எஸ்எஸ்.- ராகுல் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒடுக்கப்பட்ட தலித், பழங்குடிகள் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி அடைவதற்கான மிகப் பெரிய ஆயுதமே ஆங்கில மொழியை கற்பதுதான்; ஆனால் ஆங்கில மொழி கற்பதை ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக திட்டமிட்டு தடுத்து வருகிறது என்று 'இந்தி தாய் நிலமான' உத்தரப்பிரதேச மாநிலத்தின் ரேபரேலி தொகுதியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காட்டமாக பேசினார்.

நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மற்றும் சமஸ்கிருத மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிக்கிறது; இது தாய்மொழிகளை அழிக்கும் சதி என்பது மும்மொழிக் கொள்கை எதிர்ப்பாளர்களின் கருத்து. தமிழ்நாடு அரசு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை தர மறுக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

hindi tamilnadu english rahul gandhi

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரலி தொகுதி எம்பியான லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பொதுமக்களை சந்தித்து உரையாடினார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: ஆங்கில மொழியை கற்கக் கூடாது என பாஜக- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தடுக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் ஆங்கிலத்தில் பேசுவது இல்லை.

ஆனால் ஆங்கில மொழியை கற்பது என்பதுதான் மிகப் பெரிய ஆயுதம். நீங்கள் ஆங்கில மொழியை கற்றுக் கொண்டுவிட்டால் எங்கும் செல்லலாம். தமிழ்நாடு, ஜப்பான், மும்பை அல்லது உலகின் எந்த ஒரு நிறுவனத்திலும் நீங்கள் பணிபுரியலாம். பாஜக, ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களைப் பொறுத்தவரை நீங்கள் ஆங்கிலம் கற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

இந்த நாட்டின் பூர்வகுடிகளான பழங்குடிகள், தலித்துகள் மற்றும் ஏழை மக்கள் ஆங்கில மொழியை கற்று முன்னேறிவிடக் கூடாது என்பதில் பாஜக ஆர்.எஸ்.எஸ். உறுதியாக உள்ளது. ஆனால் ஆங்கில மொழிதான் அதிகாரத்தைக் கைப்பற்றவும் அடைவதற்குமான மிகப் பெரிய ஆயுதம். தாய்மொழியான இந்தியும் முக்கியம். அதே நேரத்தில் ஆங்கில மொழியை கற்பதும் மிக முக்கியம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி இணைந்து தேர்தலை சந்தித்திருந்தால் பாஜகவை வீழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது நடைபெறாமல் போய்விட்டது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+