வோட்டர் ஐடி- ஆதார் எண் இணைக்காவிட்டால்.. லிஸ்டில் இருந்து பெயர் நீக்கமா? மத்திய அரசு அளித்த விளக்கம்
டெல்லி: வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை என்றும் வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் இணைக்காவிட்டாலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்கள், இரட்டை பதிவு உள்ளிட்ட குழப்பங்களை களைவதற்காக வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அந்தவகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் 1-ம் தேதி ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்கள் பெறும் நடவடிக்கை தொடங்கப்பட்டது. அலுவலர்கள் நேரடியாக வீடுவீடாகச் சென்று விண்ணப்பங்களைப் பெற்றனர். அத்துடன் மொபைல் செயலி மூலமாகவும் ஆதார் தகவல்களைப் பதிவு செய்தனர். மேலும், ஆன்லைனிலும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் ஆதார் எண்களை சேகரித்தனர்.சிறப்பு முகாம்களும்நடத்தப்பட்டன. www.nvsp.in என்ற இணையதளம் வழியாக, 'Voter Help Line' எனும் செயலி வழியாகவும் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

எனவே, இந்தியா முழுவதும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை இணைப்பதற்காக அவற்றை பெறும் பணி, கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதியுடன் இந்த நடவடிக்கைகள் முடிவடையும் என்று இந்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே அறிவித்திருந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநிலங்களவையில் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியதாவது;- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை. வாக்காளர் அடையாள அட்டை - ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண் அளிப்பதற்கான கால அவகாஅசம் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. ஆதார் எண் இணைக்காவிட்டாலும் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது" என்றார். அதேபோல், மற்றொரு கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த கிரண் ரிஜிஜூ, "மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் இருக்கும் சட்டம் இயற்றும் துறை மசோதாவை உருவாக்கும் பணியை எளிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மசோதாவை உருவாக்கும் பணியில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுடன் உதவியை பெறும் திட்டம் எதுவும் இல்லை" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications