மின் இணைப்பு எண் + ஆதார் இணைப்பு எண்..தமிழ்நாடு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த முக்கிய உத்தரவு
டெல்லி: மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வற்புறுத்த கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
அட்டையுடன் ஆதார் இணைக்க கட்டாயம் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு 6 வாரத்தில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாணை: இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென்று, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.
அதில், "ஆதார் இணைப்பு என்பது ஒரு வீட்டுக்கு மட்டுமே மேற்கொள்ள முடியும், வாடகை வீட்டுதாரர்களின் ஆதார் எண்ணை இணைத்தால், அவர்கள் காலி செய்தபிறகு, புதிதாக வாடகைக்கு வருவோரின் ஆதார் இணைப்பை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும்.
ஆதார் எண்: ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்களை நடத்தும் அரசு, ஆதார் சட்டப்படி, ஆதார் எண்ணுக்கு பதில் பயன்படுத்தக் கூடிய வேறு ஆவணங்களை பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.. ஆதார் எண்ணை இணைக்காவிட்டால், மின்சார மானியம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது.. அதற்கு சட்டத்தில் எந்த விதிகளும் வழிவகை செய்யவில்லை.
எனவே, மானியம் பெற ஆதாரை கட்டாயமாக்குவதாக இருந்தால், அதற்கு மாநில தொகுப்பு நிதியத்தில் இருந்து வழங்க வேண்டும். ஆதார் இணைப்பு சமூக நல திட்ட பயன்களை பெறுவதில் பாரபட்சத்தை ஏற்படுத்துவதால் மின் கட்டண மானியம் பெற ஆதார் எண்ணை இணைக்கும்படி வற்புறுத்தக் கூடாது என்று மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். ஆதார் இணைப்பை கட்டாயமாக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்" என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதையடுத்து வழக்கை விசாரித்த, ஹைகோர்ட், எந்தவொரு அடிப்படை ஆதாரங்களும் இல்லாமல் வழக்கு தொடரப்பட்டதாக கூறி கடந்த டிசம்பர் 22ம் தேதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மீண்டும் அப்பீல்: இதற்குபிறகு, வழக்கறிஞர் எம்.எல்.ரவி, சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தார்.. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், "இந்த விவகாரம் அரசின் கொள்கை சார்ந்த ஒன்று என்பதால், அதில் நாங்கள் தலையிட முடியாது.. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதினால் பயனாளர்களுக்கு அது பாதுகாப்புதான்.
மேலும் அரசின் நலதிட்டம் அல்லது மானியம் சரியான நபருக்கு கிடைக்கிறதா என்பதை இதன் மூலம் கண்டறியவே இந்த முறை என்று அரசு கூறுகிறது.. இது கொள்கை முடிவு என்றும் அரசு விளக்கியுள்ளது.. அதனால், இது நல்லது தானே" என்று தெரிவித்த சுப்ரீம்கோர்ட் இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் சென்னை ஹைகோர்ட்டை அணுகி, சீராய்வு மனு தாக்கல் செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம்" என்று உத்தரவிட்டது.
சுப்ரீம்கோர்ட்: அதன்படியே மறுபடியும் சென்னை உயர்நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்தார். அந்த மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
உடனே ரவி, இந்த உத்தரவை எதிர்த்து மறுபடியும் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்தார்.. இந்த மனு தற்போது விசாரணைக்கு வந்தது.. உச்சநீதிபதி அபய் ஒகே, இதுகுறித்து பிறப்பித்த உத்தரவில், "மேற்கண்ட மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு 6 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும். அந்த பதிலுக்கு மனுதாரர் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்" என்று சொல்லி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications