டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.. கெஜ்ரிவால் கணிப்பின்படி கைது?

Google Oneindia Tamil News

டெல்லி: மதுபான கொள்கை சர்ச்சையில் சிக்கி சிபிஐ ரெய்டில் சிக்கியிருக்கும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இவ்வழக்கில் கைது செய்யப்படக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Recommended Video

    சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா

    டெல்லி யூனியன் பிரதேசத்தில் புதிய மதுபான கொள்கை அறிவிக்கப்பட்டது. அதாவது டெல்லியில் மதுபான விற்பனை என்பது அரசிடம் இருந்து கைமாறிய 4 கார்ப்பரேசன்கள் கைகளுக்கு மாறின. மொத்த மது விற்பனையில் 50% இந்த 4 கார்ப்பரேசன்கள் பகுதிகளில் நடைபெறுகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு லைசன்ஸ் தரப்பட்டது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன என்பதுதான் புகார்.

    Liquor policy case: CBI to arrest Delhi Deputy CM Manish Sisodia?

    உதாரணமாக லைசன்ஸ் பெற்றவர்களுக்கு ரூ.144.36 கோடிக்கு மேல் தள்ளுபடி செய்யப்பட்டது; விதிகள், செயல்முறைகளைப் பின்பற்றாமல் ஒரு நிறுவனத்தின் ரூ.30 கோடி மதிப்பிலான டெபாசிட் பணம் திருப்பி அளிக்கப்பட்டது என பாஜகவின் மீனாட்சி லேகி குற்றம் சாட்டி இருந்தார். இப்படி
    முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டதால் தலைமை செயலாளர் நரேஷ் குமார், அறிக்கை தாக்கல் செய்ய ஆளுநர் சக்சேனா உத்தரவிட்டிருந்த்ஹார். இதனடிப்படையில் கடந்த ஜூலை மாதம் டெல்லி யூனியன் பிரதேச தலைமை செயலாளர் ஆளுநருக்கு அறிக்கை தந்தார்.

    பரபர டெல்லி.. கட்டம் கட்டப்பட்ட துணை முதல்வர் மனிஷ் சிசோடியா.. வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ ரெய்டுபரபர டெல்லி.. கட்டம் கட்டப்பட்ட துணை முதல்வர் மனிஷ் சிசோடியா.. வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ ரெய்டு

    அந்த அறிக்கையில், ஜிஎன்சிடிடி சட்டம், தொழில் பரிவர்த்தனை விதி , டெல்லி உற்பத்தி வரி சட்டம் , டெல்லி உற்பத்தி வரி ஆகியன மீறப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் மதுபான உரிமங்கள் வழங்குவதற்கு சலுகைகள் காட்டப்பட்டது; அரசுக்கு இதனால் வருவாய் இழப்பு ஏற்பட்டது; உற்பத்தி வரித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ விசாரணைக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பரிந்துரை செய்திருந்தார். மேலும் கலால்துறையில் 11 அதிகாரிகளையும் ஆளுநர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார்.

    Liquor policy case: CBI to arrest Delhi Deputy CM Manish Sisodia?

    மேலும் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கைக்கு ஆளுநர் சக்சேனா அனுமதியும் தரவில்லை. இதனால் டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை வாபஸ் பெறப்படுகிறது என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அறிவித்தார். இதனால் டெல்லியில் 468 தனியார் மதுபானக் கடைகள் ஆகஸ்ட் 1-ந் தேதியுடன் மூடப்படும். இனிமேல் அரசு மதுபான கடைகள் மட்டுமே இயங்கும் எனவும் கூறியிருந்தார்.

    இந்நிலையில்தான் டெல்லியில் மணீஷ் சிஷோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் மற்றும் 7 மாநிலங்களில் மொத்தம் 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது பழிவாங்கும் நடவடிக்கை என கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். மேலும் ஏற்கனவே மணீஷ் சிஷோடியாவை கைது செய்வார்கள் எனவும் கெஜ்ரிவால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    According to the Media reports CBI may arrest Delhi Deputy CM Manish Sisodia in the Liquor policy case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X