மணிஷ் சிசோடியா திஹார் சிறையில் அடைப்பு..பகவத் கீதை எடுத்துச்செல்ல நீதிமன்றம் அனுமதி
மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
டெல்லி: சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். மணிஷ் சிசோடியாவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரவில்லை. இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார்.
டெல்லியை பொறுத்தவரை யூனியன் பிரதேசம் என்பதால் அங்கு துணை நிலை ஆளுநருக்கே அதிக அதிகாரம் உள்ளது. இதனால், பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
இந்த சூழலில், கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை அறிமுகம் செய்தது. இந்த கொள்கையில் இடம் பெற்றிருந்த முக்கிய சலுகைகள் முன்கூட்டியே கசியவிட்டு அதன் மூலம் மதுபான ஆலை அதிபர்கள் விற்பனையாளர்கள் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு கைமாறாக டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மணிஷ் சிசோடியா அலுவலகத்தில்..
இதையடுத்து, மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கிய சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மணிஷ் சிசோடியாவிடம் சிபிஐ விசாரணையும் மேற்கொண்டு இருந்தது. பிறகு டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமை செயலகத்தில் உள்ள மணிஷ் சிசோடியாவின் அலுவலகத்திலும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தது.

8 மணி நேரம் சோதனை
சிபிஐயின் இந்த நடவடிக்கை மத்திய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என சாடிய ஆம் ஆத்மி கடும் கண்டனமும் தெரிவித்தது. இந்த நிலையில், கடந்த மாதம் 27 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு மணிஷ் சிசோடியாவிற்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. அவரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் மணிஷ் சிசோடியாவை கைது செய்தனர். இதையடுத்து காவலில் எடுத்து 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது.

14 நாட்கள் நீதிமன்றக் காவல்
4 நாள் காவல் முடிந்ததும் மேலும் 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் சிபிஐக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து சிபிஐ காவல் இன்றுடன் முடிந்த நிலையில் டெல்லியி உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மணிஷ் சிசோடியா ஆஜர்படுத்தப்பட்டார். மணிஷ் சிசோடியாவை மேலும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரவில்லை. இதையடுத்து மணிஷ் சிசோடியாவை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது.

பகவத் கீதையை எடுத்து செல்ல
இதையடுத்து டெல்லி திகார் சிறையில் மணிஷ் சிசோடியா அடைக்கப்பட்டார். மணிஷ் சிசோடியா தனக்கு தேவையான மருந்து பொருட்களை எடுத்து செல்ல கோர்ட் அனுமதி கொடுத்தது. அதேபோல், கண்ணாடிகள், டைரி, பேனா, பகவத் கீதை புத்தகம் ஆகியவற்றையும் எடுத்து செல்ல கோர்ட் அனுமதி கொடுத்தது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications