இந்தியாவின் 100 ரூபாயை கொடுத்தால் 50 ஆயிரம் கொடுப்பாங்க.. எந்த நாட்டில் தெரியுமா? இதோ விவரம்
டெல்லி: உலக அளவில் இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது பண மதிப்பு மிகவும் குறைந்த நாடுகள் பல உள்ளன. குறிப்பாக சில நாட்டின் பண மதிப்பு மிகவும் குறைவாக உள்ளது. ஆச்சரியப்படும் வகையில், சில நாடுகளில் இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு அந்த நாட்டின் மதிப்பில் பலநூறு ரூபாய் மதிப்பு உள்ளது. பண மதிப்பு மிகவும் குறைவாக உள்ள நாடுகளின் பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.
சர்வதேச சந்தைகளில் ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பிற்கும் ஒரு மதிப்பு உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு மிகவும் குறைவாக பல வளர்ந்த நாடுகளில் உள்ளன. உதாரணத்திற்கு அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், அமெரிக்காவின் ஒரு டாலரின் மதிப்பு என்பது இந்தியாவின் 83.89 ரூபாய்க்கு சமம். நமது நாட்டின் 83 ரூபாயை கொடுத்தால்தான் அமெரிக்காவில் ஒரு டாலர் கிடைக்கும் .

குறைந்த பணமதிப்பு: அதேபோல குவைத்தின் தினார் மதிப்பு 274.25 ஆக உள்ளது. குவைத்தின் ஒரு தினாருக்கு இந்திய பணத்தை 275 ரூபாய் செலவிட வேண்டியிருக்கும். பிரிட்டனை எடுத்துக் கொண்டால் அங்குள்ள பவுண்டுக்கு எதிரான இந்திய மதிப்பு 110.10 ரூபாயக உள்ளது. சர்வதேச அளவில் பணத்தின் மதிப்பு அதிகமாக உள்ள நாடுகளை போலவே, சில நாடுகளில் பண மதிப்பு மிக குறைவாக உள்ளன.
எப்படி கணக்கிடப்படுகிறது?: அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சி, கையிருப்பு தங்கம், பணவீக்கம், அன்னிய முதலீடுகள், அரசியல் நிலைத்தன்மை இன்மை என பல்வேறு காரணிகள் இவற்றை தீர்மானிக்கின்றன. அந்த வகையில், தான் பண மதிப்பு மிகவும் குறைவாக உள்ள நாடுகளும் பல உள்ளன. உதாரணத்திற்கு இந்தியாவின் ஒரு ரூபாயை கொடுத்தால் அதற்கு பதிலாக 500 மதிப்புள்ள அந்த நாட்டின் பணத்தை அங்கே பெற முடியும்.
ஈரான் பணமதிப்பு: இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஈரான் தான். இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது ஈரானில் 503 ரியாலுக்கு ஈடானது. எண்ணெய் வளம் மிக்க நாடாக அறியப்படும் ஈரான், சமீப காலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. உள்நாட்டு பிரச்சினை, அமெரிக்காவின் பொருளதார தடைகள், ஈரான் - ஈராக் பிரச்சினை, அணு ஆயுத திட்டங்கள் என பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள ஈரான் கடுமையான பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதனால் இந்தியாவின் 100 ரூபாயை பெறுவதற்கு ஈரான் நாட்டில் 50 ஆயிரம் ரூபாய் கொடுப்பார்கள். இந்திய ரூபாயுடன் ஒப்பிடும் போது மிகவும் மதிப்பு குறைந்த பண மதிப்பை கொண்டதாக ஈரான் நாடே உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் பண மதிப்பு ரூ.42,062 ஆகும். இதேபோல் இந்தியாவை ஒப்பிடுகையில் குறைந்த பண மதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
வட இந்தியாவில் இருந்து.. சென்னை வந்த லாரியை மடக்கிய கும்பல்..! ரூ.11 கோடி ஐபோன்கள் திருட்டு
வியட்நாம்: ஈரானை போலவே வியட்நாமின் பண மதிப்பு மிக குறைவாக உள்ளது. வியட்நாமின் டாங்க் (VND) பண மதிப்பு இந்தியாவின் ஒரு ரூபாய்க்கு 304.82 ஆக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு 25,441 ஆகும். தென் கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் மேற்கோண்ட பொருளாதார நடவடிக்கைகள் அந்நாட்டின் பண மதிப்பு வீழ்ச்சிக்க்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மைய பொருளாதாரத்தில் இருந்து சந்தை பொருளாதாரத்திற்கு மாறுவது, உள்நாட்டு பிரச்சினைகள் போன்ற பல சிக்கல்களை வியட்நாம் எதிர்கொண்டுள்ளது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி, பண மதிப்பு அதல பாதாளத்தில் இருக்க காரணமாக உள்ளது.
லாவோஸ்: தென் கிழக்கு ஆசியாவில் தாய்லாந்துக்கும் வியட்நாமிற்கும் இடையே இந்த லாவோஸ் நாடு உள்ளது. லாவோஸ் நாட்டின் பணமான லாவோ கிப் (LAK)-ன் மதிப்பும் மிகவும் குறைவாக உள்ளது. இந்திய ரூபாய்க்கு எதிரான லாவோ பணத்தின் மதிப்பு 254.2 ஆகும். லாவோ நாட்டில் இருந்து ஒருவர் தனது நாட்டின் பணத்தை கொடுத்து இந்தியாவின் ஒரு ரூபாயை பெற வேண்டும் என்றால் ரூ.254 ஐ செலவிட வேண்டும்.. அந்த அளவுக்கு நாட்டின் பணவீக்கமும் பொருளாதாரமும் மோசமாக உள்ளது.
சியர்ரா லியோனே: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சியர்ரா லியோனே (Sierra Leone). வறுமை, உள்நாட்டு பிரச்சினை என சவால்களை இந்த நாடு சந்தித்து வருகிறது. இந்த நாட்டின் பண மதிப்பு இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால் 227.88 ஆக உள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான பண மதிப்பு என்றால் 21,222 ஆகும்.
இந்தோனேஷியா: இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது இந்தோனேஷியா.. தென் கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ளது இந்த நாடு. பல்வேறு தீவுக்கூட்டங்களை கொண்ட நாடாக இந்தோனேஷியா உள்ளது. இந்தேனேஷியாவின் ரூபாயா (Rupiah)வின் இந்திய ரூபாய்க்கு எதிரான மதிப்பு 191 ஆகும். அன்னிய செலாவணி கையிருப்பு குறைவு, ஏற்றுமதி, வெளி முதலீடுகளை அதிகம் நம்பியிருப்பது போன்றவை காரணமாக இந்தோனேஷியாவின் பண மதிப்பு மிக குறைவாக உள்ளது.












Click it and Unblock the Notifications