மேலும் 2 வாரம்.. பெரிய அளவில் வரும் தளர்வுகள்.. லாக்டவுன் 4.0 குறித்து வெளியான முக்கிய விவரங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் 4.0 மேலும் இரண்டு வாரங்களுக்கு போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

Recommended Video

    National Lockdown 4.0: அதிக தளர்வுகள்... லாக்டவுன் 4.0 குறித்து வெளியான தகவல்கள்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதுவரை மூன்று முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 17 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு திங்கள் கிழமைக்குள் வெளியாகும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இரண்டு வாரம் நீடிக்கும்

    இரண்டு வாரம் நீடிக்கும்

    இந்த லாக்டவுன் 4.0 இரண்டு வாரங்களுக்கு போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. பெரும்பாலும் இந்த மாதம் 31ம் தேதி வரை இந்த லாக்டவுன் 4.0 இருக்கும் என்று கூறுகிறீர்கள். இதற்கான திட்டங்களை மாநில அரசுகள் சமர்ப்பித்து உள்ளது. மாநில அரசுகள் அனுப்பிய லாக்டவுன் எக்சிட் பிளானை மத்திய அரசு தீவிரமாக பரிசோதனை செய்து வருகிறது. இன்று அல்லது நாளை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

    மூன்று சோன்கள்

    மூன்று சோன்கள்

    இந்த லாக்டவுன் 4.0ல் பச்சை மற்றும் ஆரஞ்ச் பகுதிகளுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கிறார்கள். அதே சமயம் சிவப்பு பகுதிகளுக்கும் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படும். தற்போது பச்சை மண்டலங்களுக்கு இருக்கும் தளர்வுகள் வரும் லாக்டவுன் 4.0ல் சிவப்பு மண்டலங்களுக்கு அறிவிக்கப்படும். பச்சை மண்டலங்களில் கடைகள் திறக்கும் நேரமும், மக்கள் வெளியேறும் நேரமும் அதிகரிக்கப்படும்.

    கட்டுப்பாட்டு பகுதி எப்படி

    கட்டுப்பாட்டு பகுதி எப்படி

    அதே சமயம் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்கிறார்கள். கண்டெயின்மெண்ட் சோன் என்று அழைக்கப்படும் கட்டுப்பாடு பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். சிவப்பு மண்டலங்களில் இருக்கும் கட்டுப்பாட்டு பகுதிகளில் அதிக கேஸ்கள் இருக்கிறது. அதனால் இங்கு மட்டும் கட்டுப்பாடுகள் தொடரும் என்கிறார்கள்.

    என்ன மாதிரியான தளர்வுகள்

    என்ன மாதிரியான தளர்வுகள்

    பொருளாதார செயல்பாடுகளை தொடங்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான தொழில்கள், நிறுவனங்களுக்கு அதிக தளர்வுகள் அளிக்கப்பட்டு என்கிறார்கள். கடைகள் திறக்கும் நேரம் தொடங்கிஅலுவலகம் இயங்கும் விதிகள் வரை பல விஷயங்களில் தளர்வுகள் வரும் என்றுகூறுகிறார்கள். பொருளாதார இழப்பை சரி செய்யும் வகையில் இந்த கட்டுப்பாடு இருக்கும்.

    போக்குவரத்து தளர்வு

    போக்குவரத்து தளர்வு

    மெட்ரோ சேவைகள் குறைந்த பயணிகளுடன் தொடங்கும் என்கிறார்கள். பெரும்பாலான மாநிலங்களில் பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் விமான சேவை முக்கியமான நகரங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும். உள்ளூர் விமான சேவை மட்டும் தொடங்கும். வெளிநாட்டு விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில் சேவை தொடங்கப்படும். இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

    தமிழகம் வைத்த கோரிக்கை

    தமிழகம் வைத்த கோரிக்கை

    இந்த ஊரடங்கில் சில மாநிலங்கள் அதிக தளர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி பஞ்சாப், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் கூடுதல் தளர்வு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. அசாம் போன்ற மாநிலங்கள் மத்திய அரசின் விதிகளை அப்படியே பின்பற்ற முடிவு செய்துள்ளது. குஜராத்தில் தளர்வுகள் பெரிய அளவில் அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

    மாநிலங்கள் வைத்த கோரிக்கை

    மாநிலங்கள் வைத்த கோரிக்கை

    தற்போது ஒரு மாநிலத்தில் எது சிவப்பு மண்டலம், எது பச்சை மண்டலம், எது ஆரஞ்ச் மண்டலம் என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்கிறது. ஆனால் இதை நாங்களே தீர்மானிக்கிறோம் என்று சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறியுள்ளது. அதனால் லாக்டவுன் 4.0ல் மண்டலங்களை பிரிக்கும் பணியை மத்திய அரசே மேற்கொள்ளும் என்று கூறுகிறார்கள்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+