டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எக்சிட் பிளானை பொறுத்தே முடிவு.. மாநில அரசுகளிடம் கேட்ட மோடி.. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் 4.0 குறித்து பிரதமர் மோடி பின்னர் அறிவிக்கப்படும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பெரும்பாலும் மாநில அரசுகள் லாக்டவுன் குறித்த எக்சிட் பிளான்களை அளித்த பின் பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள்.

Recommended Video

    Lockdown 4.0 மாநில அரசுகளிடம் யோசனை கேட்ட மோடி.. லாக்டவுன் 4.0 எப்படி இருக்கும்?

    இந்தியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று மக்கள் முன்னிலையில் பேசினார். அதன்படி இந்தியாவில் லாக்டவுன் 4.0 அமல்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் இந்தியாவில் அமல்படுத்தப்பட உள்ள லாக்டவுன் 4 மிகவும் மாறுபட்டதாக இருக்கும்.

    இதில் விதிமுறைகள் மிகவும் வேறுபாடுடன் இருக்கும். புதிய லாக்டவுன் 4.0 குறித்து மே 18-ந் தேதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார் .

    லாக்டவுன் 4.0 வேறு மாதிரி இருக்கும்.. மே 18-ந் தேதிக்கு முன் விவரங்கள் வெளியிடப்படும்.. பிரதமர் மோடிலாக்டவுன் 4.0 வேறு மாதிரி இருக்கும்.. மே 18-ந் தேதிக்கு முன் விவரங்கள் வெளியிடப்படும்.. பிரதமர் மோடி

    மோடி நடந்தது

    மோடி நடந்தது

    லாக்டவுன் குறித்து பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். லாக்டவுனை நீடிப்பது என்றால் எப்படி நீட்டிப்பது, முடிவிற்கு கொண்டு வருவது என்றால் எப்படி முடிவிற்கு கொண்டு வருவது என்று ஆலோசனை செய்தார். இதில் பெரும்பாலான முதல்வர்கள் தளர்வுகளுடன் லாக்டவுனை நீட்டிக்கலாம் என்று கூறியுள்ளனர். இன்னும் சில முதல்வர்கள் லாக்டவுனை இதேபோல் தொடர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    மோடி கோரிக்கை

    மோடி கோரிக்கை

    இந்த நிலையில் எல்லா மாநிலங்களிடமும் பிரதமர் மோடி எக்சிட் பிளான் குறித்து கேட்டறிந்தார். அதாவது லாக் டவுனை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்துவது என்பது குறித்து பிரதமர் மோடி கேட்டார். இது தொடர்பான எக்சிட் பிளானை எல்லா மாநிலங்களும் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். மே 15ம் தேதிக்குள் எக்சிட் பிளான்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மோடி கோரிக்கை வைத்தார்.

    எக்சிட் பிளான் வேண்டும்

    எக்சிட் பிளான் வேண்டும்

    இந்த நிலையில் இந்த எக்சிட் பிளானை பொறுத்தே லாக்டவுன் 4.0 மத்திய அரசு முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது. அதாவது மே 15ம் தேதி எல்லா மாநிலங்களும் தங்களின் திட்டங்களை வகுத்த பிறகே மத்திய அரசு இதில் முடிவு எடுக்கும். ஆனால் லாக்டவுனை நீட்டிப்பது கண்டிப்பாக நடக்கும். அதில் மாற்றம் இல்லை. லாக்டவுன் எப்படி இருக்கும், என்னென்ன தளர்வுகள் வரும் என்பது மட்டும் மாநில அரசுகளின் எக்சிட் பிளான் அறிக்கையை பொறுத்தே அமையும்.

    மோடி சொன்னது என்ன

    மோடி சொன்னது என்ன

    மேலும் மாநிலங்களின் பரிந்துரையின் பேரிலேயே 4ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்படும். இந்த லாக்டவுன் வேறு மாதிரி இருக்கும் என்று மோடி கூறியுள்ளார். ஆகவே இந்தியாவில் பெரும்பாலும் பெரிய அளவில் தளர்வுகள் கொண்டு வரப்படும். கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கும். பெரிய அளவில் மற்ற இடங்களில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Lockdown 4 will be implemented on the basis of exit plans from the state government, by central government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X