டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

லாக்டவுன் 5.0.. கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜுன் 30 வரை ஊரடங்கு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் ஜூன் 8ம் தேதியில் இருந்து தளர்வுகள் கொண்டாட வரப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளதது.

Recommended Video

    Unlock 1.0| ஜூன் 30 வரை லாக்டவுன் நீட்டிப்பு... மத்திய அரசு உத்தரவு

    இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து லாக்டவுன் அமலில் இருக்கிறது. இதுவரை நான்கு முறை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொருமுறையும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 31ம் ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஐந்தாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    என்ன அறிவிப்பு

    என்ன அறிவிப்பு

    லாக்டவுன் 5.0 குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த முறை கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாடு இல்லாத மற்ற பகுதிகளில் தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தளர்வு என்ன

    தளர்வு என்ன

    கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டாட வரப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளதது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் இடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக தளர்வுகள் கொண்டு வரப்பப்டும். இதற்கு அன்லான் 1.0 என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மூன்று கட்டங்களாக கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    கட்டுப்பாடு பகுதி

    கட்டுப்பாடு பகுதி

    ஜூலை 8ம் தேதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசுகள் நினைத்ததால் கூடுதல் தளர்வுகளை கொண்டு வர முடியும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மாநில அரசுகள் நினைத்தால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    இதில் முக்கியமாக ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் கட்டுப்பாட்டு பகுதிகளில் மற்றும் கட்டுப்பாடு அல்லாத பகுதிகளில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு இருக்கும். மாநிலங்களுக்கு இடையே மற்றும் உள்ளேயும் சரக்கு வாகனங்களை இயக்க தடை இல்லை.

    என்ன கட்டாயம்

    என்ன கட்டாயம்

    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட நிர்வாகமே முடிவு செய்யலாம். சர்வதேச விமான சேவை தொடங்காது. சிறப்பு ரயில்கள், பயணிகள் ரயில்கள், உள்நாட்டு விமான சேவை, வெளிநாட்டு விமான சேவை ஆகியவை கட்டுப்பாடுகளுடன் தொடரும். பொது இடங்களில் முக கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    Lockdown 5.0 extended till June month end says MHA today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X