கட்டுப்படாத கொரோனா டெல்லியில் ஊரடங்கு மேலும் 1 வாரம் நீட்டிப்பு - கெஜ்ரிவால் அறிவிப்பு
நாட்டின் தலைநகர் டெல்லியில் அமலில் உள்ள முழு ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொது முடக்கத்தை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். வரும் 3ஆம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியம் பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. அங்கு தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 19ஆம் தேதி இரவு முதல் 26ஆம் தேதி காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து இருந்தார்.
கொரோனா கட்டுப்பட்டதாக தெரியவில்லை தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வந்தால், இரண்டாவது முறையாக முழு ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தினசரி பாதிப்புகளும் மரணங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. சுடுகாடுகளில் சடலங்கள் எரிந்து கொண்டே இருக்கின்றன.
தலைநகர் டெல்லியில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இன்றைய தினம் ஒரு மருத்துவர் உட்பட 12 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பவர்களின் இறப்பு விகிதமும் தினசரி அதிகரித்துக்கொண்டே செல்வதால் லாக்டவுன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை 3ஆம் தேதி காலையுடன் முழு ஊரடங்கு முடிவிற்கு வரும் நிலையில், மே 10ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications