சீனா, பாகிஸ்தானுக்கு கிலி.. இந்திய விமானப்படைக்கு கிடைக்கும் கேம் சேஞ்சர்! இனி நாமதான் கெத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்க ஆயுத உற்பத்தியாளரான, F ரக போர் விமானங்களைத் தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின், இந்தியாவுக்கு F-21 போர் விமானத்தை விற்பனை செய்ய முன் வந்திருக்கிறது. 'மேக் இன் இந்தியா' முயற்சியின் கீழ் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் இந்த விமானங்களை உற்பத்தி செய்ய தயாராக இருப்பதாக கூறியிருக்கிறது.

உலகமே 5ம் தலைமுறை விமானங்களை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தியாவுக்கும் அப்டேட் விமானங்கள் தேவைதான். இப்போது அமெரிக்க நிறுவனம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் F-21 போர் விமானம் 4.5ம் தலைமுறையை சேர்ந்ததாகும். எனவே இந்த ஆஃபரை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று கேள்வி எழலாம். ஆனால் போரில் நவீன விமானங்களை விட, மொத்த விமானங்களின் எண்ணிக்கைதான் முக்கியம்.

IAF US Rafale

இந்திய விமானப்படையின் பலம்

உதாரணத்திற்கு இந்தியாவிடம் இருப்பதிலேயே பலம் வாய்ந்த விமானம் எது என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ரஃபேல் என சொல்லிவிடலாம். ஆனால், இந்திய விமானப்படையின் பலம் எது என்று கேட்டால் அதற்கான பதில் ரஃபேல் கிடையாது. ரஷ்ய தயாரிப்பான Su-30MKI தான் இந்திய விமானப்படையின் பலம். காரணம் நம்மிடம் மொத்தம் 259 Su-30MKI விமானங்கள் இருக்கின்றன. இது ரஃபேலை விட நமக்கு அதிக பலத்தை கொடுக்கிறது.

எது புத்திசாலித்தனம்?

ஆக எண்ணிக்கைதான் போரில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. எனவே 5ம் தலைமுறை விமானங்களை வாங்குவதை விட, 4.5ம் தலைமுறை விமானமான F-21ஐ அதிகமாக வாங்குவதே சிறந்தது. விலையும் இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். F-21ஐ தயாரிக்கும் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம்தான் F-35 எனும் 5ம் தலைமுறை விமானங்களையும் தயாரிக்கிறது. ஆனால், இதன் விலை 150 மில்லியன் அமெரிக்க டாலராகும். இதுவே F-21ன் அப்கிரேட் ரகத்தின் விலை 100 மில்லியன்தான்.

5ம் தலைமுறை vs 4ம் தலைமுறை

எனவே ஒப்பீட்டளவில் பார்த்தால் F-21 வாங்குவதுதான் நல்ல யோசனையாக இருக்கும். அதேபோல 5ம் தலைமுறை விமானங்களை காட்டிலும் சற்று குறைவான அம்சங்களை இது கொண்டிருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்கிற கணக்கா, F-21 தீயாக வெடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மட்டுமல்லாது இந்திய விமானப்படையின் தேவைகள் மற்றும் தனித்தன்மைகளுக்கு ஏற்பட இந்த விமானங்கள் வடிவமைக்கப்படும் என்று லாக்ஹீட் மார்ட்டின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டெய்க்லெட் கூறியுள்ளார்.

டம்மி பீசான 5ம் தலைமுறை விமானங்கள்

இந்தியாவை தவிர்த்து சர்வதேச அளவில் போர் விமானங்களின் திறன்கள் என்று எடுத்துக்கொண்டால், ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை வெற்றிகரமாக 5ம் தலைமுறை போர் விமானங்களை தயாரித்திருக்கின்றன. இருப்பினும் இதற்கான தயாரிப்பு செலவு, மெயின்டெயின் செலவுகள் அதிகம். எனவே, இந்த விமானங்கள் அதிக எண்ணிக்கையில் இல்லாமல் மிக குறைந்த அளவே இருக்கிறது.

சீனாவை சீண்டுவோமா?

என்னதான் 5ம் போர் விமானங்கள் பின்னால் பல நாடுகள் ஓடிக்கொண்டிருந்தாலும், போர் விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் வாய்ந்த ஏவுகணைகளும் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. யோசித்து பாருங்கள், ஒரு இக்கட்டான சூழலில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் மோதல் ஏற்படுகிறது எனில், அவர்களிடம் 5ம் தலைமுறை விமானங்கள் இருக்கின்றன. ஆனால் நம்மிடம் அதை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் இருக்கின்றன. இரண்டில் எது சிறந்தது? யார் வெல்வார்கள்?

ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் செலவு கம்மிதான். ஆகவே நம்மிடம் ஏராளமான ஏவுகணைகள் இருக்கும். இதிலிருந்து சீனாவால் தப்பிக்கவே முடியாது. எனவே 5ம் தலைமுறை விமானங்களுக்கு பின்னால் போகாமல் புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வதுதான் சரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+