லோக்சபா தேர்தல்.. நாளை 5ம் கட்ட வாக்குப்பதிவு.. உ.பி உட்பட 7 மாநிலங்களில் தேர்தல்!
டெல்லி: லோக்சபா தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுக்க 51 தொகுதிகளில் நாளை நடக்கிறது. இதில் உத்தர பிரதேசம் அதிக கவனம் பெறுகிறது. நாளை காலை 7 மணிக்கு இந்த வாக்குப்பதிவு தொடங்கும். மாலை 6 மணி வரை தேர்தல் நடக்கும்.
லோக்சபா தேர்தல் கொஞ்சம் கொஞ்சமாக முடிவை நெருங்கி வருகிறது . இது வரை நான்கு கட்ட லோக்சபா தேர்தல் நிறைவடைந்துள்ளது. இது வரை 374 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் நாளை ஐந்தாம் கட்டமாக 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நடந்த தேர்தலில் பெரிய அளவில் கலவரமோ, புகாரோ தெரிவிக்கப்படவில்லை. பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு அடைந்தது. தமிழகத்திலும் 18 சட்டசபை மற்றும் 38 லோக்சபா தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
நாளை மேற்கு வங்கத்தில் ஐந்தாவது கட்டமாக 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு ஏற்கனவே 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. பீகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ராஜஸ்தானில் 12 இடங்களில் தேர்தல் நடக்கிறது.
காஷ்மீரில் 2 தொகுதியில் தேர்தல் நடக்கிறது. அங்கு தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் தேர்தல் நடக்கிறது. மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். ஜார்கண்டில் 4 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இங்கு ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடக்கிறது. இங்கு ரேபரேலி, அமேதியில் தேர்தல் நடக்கிறது. இங்கு முக்கிய வேட்பாளர்கள் இன்று தேர்தலை சந்திக்கிறார்கள்.
ரேபரேலியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அங்கு அவரை பாஜக அமைச்சர் ஸ்மிதி இராணி எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தல் காரணமாக நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications