லோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video
Lok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
டெல்லி: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.
தேர்தல் தொடர்பான உடனுக்குடன் செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் இணைந்திருங்கள்.
தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது
தமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.
மக்கள் தெளிவாக உள்ளனர்- வடிவேலு

மக்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் தெளிவாக உள்ளார்கள். தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். யார் வந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டும். சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு பேட்டி. முன்னதாக வாக்குச்சாவடிக்குள் போட்டோ எடுத்தபோது, டான்ஸ் ஆடி காமெடி செய்தார் வடிவேலு.
தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவு
தமிழகம்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகவும், கரூரில் அதிகபட்சமாக 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும், குறைவாக சென்னை மத்திய தொகுதியில் வாக்குப்பதிவாகியுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம்?
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர், டிஜிபியிடம் திமுக புகார் கடிதம் அளித்துள்ளது. வாக்குச் சாவடிகளை கைப்பற்ற போலீஸ் ஒத்துழைக்கும் வகையில் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக புகார். வாக்குச் சாவடி உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார்.
வாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம் என திமுக கடிதம் #TNElection2019 #VotingRound2 pic.twitter.com/qjhwZAKvSP
— Oneindia Tamil (@thatsTamil) April 18, 2019
85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்

தமிழகம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.
READ MORE

More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications