6-வது கட்ட லோக்சபா தேர்தல்: 58 தொகுதிளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு!
டெல்லி: லோக்சபா தேர்தலின் 6-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 8 மாநிலங்களின் 58 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது.
18-வது லோக்சபா தேர்தல் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலின் 6-ம் கட்ட வாக்குப் பதிவானது 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 58 தொகுதிகளில் வரும் சனிக்கிழமையன்று மே 25-ந் தேதி நடைபெறுகிறது. இதில் மொத்தம் 889 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

6-ம் கட்டத்தில் உத்தரப் பிரதேசத்தில் 14 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 10 தொகுதிகளுக்கும், பீகாரில் 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் 7 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகளுக்கும், ஒடிஷாவில் 6 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 4 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு 2024 மே 25-ம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
6-வது கட்ட தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகள்:
பீகார் (8 இடங்கள்)
1. வால்மீகி நகர்
2. பாஸ்கிம் சம்பரன்
3. பூர்வி சம்பரன்
4. ஷியோஹர்
5. வைஷாலி
6. கோபால்கஞ்ச்
7. சிவன்
8. மகாராஜ்கஞ்ச்
ஹரியானா (10 இடங்கள்)
1. அம்பாலா
2. குருக்ஷேத்திரம்
3. சிர்சா எஸ்சி
4. ஹிசார்
5. கர்னல்
6. சோனிபட்
7. ரோஹ்தக்
8. பிவானி-மகேந்திரகர்
9. குர்கான்
10. ஃபரிதாபாத்
ஜம்மு காஷ்மீர் (1இடம்)
1. அனந்த்நாக்-ரஜௌரி
ஜார்கண்ட் (4 இடங்கள்)
1. கிரிதிஹ்
2. ராஞ்சி
3. ஜாம்ஷெட்பூர்
4. தன்பாத்
டெல்லி (7)
1. சாந்தினி சௌக்
2. வடகிழக்கு டெல்லி
3. கிழக்கு டெல்லி
4. புதுடெல்லி
5. வடமேற்கு டெல்லி
6. மேற்கு டெல்லி
7. தெற்கு டெல்லி
ஒடிஷா (6 இடங்கள்)
1. சம்பல்பூர்
2. கியோஞ்சர்
3. டென்கனல்
4. பூரி
5. புவனேஸ்வர்
6. கட்டாக்
உத்தரப் பிரதேசம் (14 இடங்கள்)
1. சுல்தான்பூர்
2. பிரதாப்கர்
3. புல்பூர்
4. அலகாபாத்
5. அம்பேத்கர் நகர்
6. டோமரியகஞ்ச்
7. சந்த் கபீர் நகர்
8. லால்கஞ்ச்
9. அசம்கர்
10. ஜான்பூர்
11. மச்லிஷாஹர்
12. பதோஹி
13. ஷ்ரவஸ்தி
14. பஸ்தி
மேற்கு வங்கம் (8 இடங்கள்)
1. தம்லுக்
2. காந்தி
3. கட்டல்
4. ஜார்கிராம்
5. மேதினிபூர்
6.புருலியா
7. பாங்குரா
8. பிஷ்ணுபூர்
இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications