டெல்லி பாஜக வேட்பாளர்கள்.. இத்தனை சீனியர்களுக்கு கல்தாவா? மறைந்த மூத்த பெண் தலைவர் 'வாரிசு' போட்டி!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. 34 மத்திய அமைச்சர்கள் உட்பட 195 வேட்பாளர்களை அறிவித்த பாஜக, டெல்லியில் சீனியர்கள் பலரையும் கழற்றிவிட்டிருக்கிறது.
லோக்சபா தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடிய விடிய ஆலோசனை நடத்தியது. இதனையடுத்து எந்த நேரத்திலும் லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதன்படி இன்று பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி இருக்கிறது. 34 மத்திய அமைச்சர்கள் உட்பட 195 வேட்பாளர்கள் முதல் கட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 28 பேர் பெண்கள். 47 பேர் இளைஞர்கள். உத்தரப்பிரதேச மாநிலத்தின் 51 லோக்சபா தொகுதிகளுக்கும் மேற்கு வங்கத்தின் 20 தொகுதிகளுக்கும் டெல்லியின் 5 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள்னர்.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லாம் தேப், லோக்சபா சபாநாயகர் ஒம் பிர்லா ஆகியோரும் வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் ஓம் பிர்லா போட்டியிடுகிறார்.
இந்த வேட்பாளர்கள் பட்டியலில் டெல்லியில் பல சீனியர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது. லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்ட ரமேஷ் பிதுரி, பர்வேஸ் வர்மா, மீனாக்ஷி லெகி, ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கழற்றிவிடப்பட்ட முக்கிய தலைவர்கள். இந்த பட்டியலில் சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யா தாக்கூரும் இடம் பெற்றுள்ளார். மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான பின் மத்திய பிரதேச மாநிலம் போபால் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்பியானவர். தற்போதைய பட்டியலில் சாத்வி பிரக்யா தாக்கூர் பெயர் இடம்பெறவில்லை. அதேபோல மத்திய அமைச்சர் ஜான் பிர்லா பெயரும் முதல் கட்ட வேட்பாளர்களில் இல்லை.
மறைந்த மூத்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகள், பன்சூரி ஸ்வராஜ் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். புது டெல்லி தொகுதி பாஜக வேட்பாளராக சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு டெல்லியில் கமல்ஜீத் ஷெராவத், தெற்கு டெல்லியில் எம்.எல்.ஏ. ராம்வீர் சிங் பிதூரி, சாந்தினி சவுக் தொகுதியில் பிரவீன் காடெல்வால் போட்டியிடுகின்றனர். மனோஜ் திவாரி மீண்டும் வடகிழக்கு டெல்லியில் போட்டியிடுகிறார்.
மேலும் மேற்கு வங்கம் அன்சோல் தொகுதியில் எதிர்பார்த்தபடியெ போஜ்பூரி நடிகர் பவான் சிங் களமிறக்கப்பட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக இத்தொகுதியில் சத்ருஹன் சின்ஹா போட்டியிடுவார் என்பது எதிர்பார்ப்பு.
உ.பி.யிஅப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் முன்னாள் எம்பி ரிதேஷ் பாண்டேவை அம்பேத்கர் நகர் தொகுதியில் களமிறக்கி இருக்கிறது பாஜக. ஹேமமாலினி, ரவி கிஷண், அஜய் மிஸ்ரா டெனி, மகேஷ் சர்மா ஆகியோர் மீண்டும் அதே தொகுதிகளிலேயே போட்டியிடுகின்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஓடிவந்த முன்னாள் எம்பி கீதா கோடா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் மத்திய தேர்தல் குழு மீண்டும் கூடி 2-வது கட்ட வேட்பாளர்கள் குறித்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளது. அந்தப் பட்டியலில் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படக் கூடும்.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications