Lok Sabha Election Exit Poll LIVE: தமிழகத்தில் திமுக அணி வெல்லும்; மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா 'தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு' முடிவுகள், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஆட்சிதான் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கின்றன. மத்தியில் பாஜக தலைமையில்தான் ஆட்சி அமைக்கும் என்கின்றன எக்ஸிட் போல் முடிவுகள்.

18-வது லோக்சபா தேர்தல் 543 தொகுதிகளிலும் 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை இந்த வாக்கு பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

லோக்சபா தேர்தல் எக்ஸிட் போல் முடிவுகளை இந்தப் பக்கத்தில் காணலாம்

lok sabha election 2024 bjp congress

Jun 03, 2024, 9:49 pm IST

எந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை என்றும், 40க்கு 40 எங்கள் இலக்காக இருந்தாலும் நிச்சயமாக 25 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
Jun 03, 2024, 9:30 pm IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் பொய் என்றும் யாரோ சொன்ன கட்டளைக்கு ஏற்ப கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
Jun 03, 2024, 9:01 pm IST

லோக்சபா தேர்தலில் பாஜக 325 - 400 இடங்களை வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சொல்லியிருக்கின்றன. மோடியின் 400 என்ற இலக்கு நிரூபணம் ஆக உள்ளது. கோவாவில் உள்ள 2 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும். பாஜக 400 இடங்களுக்கு மேல் வெல்லுமா என்பது நாளை தெரியும் - கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்.
Jun 03, 2024, 8:19 pm IST

மக்களின் கருத்துக்கணிப்பில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மோடியின் கருத்துக்கணிப்புகள் எனவும் பீகார் எதிர்க்கட்சி தலைவரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறினார்.
Jun 03, 2024, 7:46 pm IST

எக்ஸிட் போல் முடிவுகளை நம்பாமல், காங்கிரஸ் கட்சியின் சர்வே அடிப்படையில் 290 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம் என கட்சியின் மூத்த தலைவர்கள் நம்புவதாக தகவல்
Jun 03, 2024, 7:22 pm IST

தேர்தலின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுகின்றது என்றும், தேர்தல் ஜனநாயகத்தை நிலைநிறுத்த நடவடிக்கை வேண்டும் என்றும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். முன்னாள் நீதிபதிகள் அக்பர் அலி, அருணா ஜெகதீசன், எஸ் விமலா உள்ளிட்டோர் கடிதம் எழுதியுள்ளனர்.
Jun 03, 2024, 7:21 pm IST

தேர்தல் முடிவுகள் வரும் நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் டெல்லியில் இருக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் அழைப்பு விடுத்து உள்ளது.
Jun 03, 2024, 6:17 pm IST

நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரகாஷ் ராஜை நடிகராகத்தான் பார்க்க வேண்டும் என ஈரோடு பண்ணாரி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்த மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கூறினார்.
Jun 03, 2024, 4:50 pm IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் சிரிப்பூட்டுபவையாக இருக்கின்றன என காங்கிரஸின் சசி தரூர் கூறியுள்ளார். நாங்கள் நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டிருக்கிறோம். மக்களின் உணர்வுகளை அறிந்திருக்கிறோம். எனவே இந்த கருத்துக்கணிப்புகளை அவநம்பிக்கையுடனும், சந்தேகத்துடனும் பார்க்கிறோம் என சசி தரூர் கூறியுள்ளார்.
Jun 03, 2024, 4:11 pm IST

நாடு முழுக்க 400 இடங்களில் என்டிஏ கூட்டணி வெல்லும்.. பீகாரில் உள்ள அனைத்து 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம்.. கருத்துக்கணிப்பு முடிவுகளைப் பார்த்தால் யார் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.. இன்னும் சரியான கருத்துக் கணிப்பு நாளை வரும்- பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி
Jun 03, 2024, 3:36 pm IST

எக்ஸிட் போல்கள் உண்மையில் பல மாதங்களுக்கு முன்பே தயாரிக்கப்பட்டவை. அவை இப்போது ஒளிபரப்பப்பட்டுள்ளன. நாளை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில், அதில் மோசடிக்கான வாய்ப்பு உள்ளது- சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்
Jun 03, 2024, 3:07 pm IST

கர்நாடகாவில் ஜேடிஎஸ்- பாஜக கூட்டணி 25க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும்.. தேசியளவில் என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்- எச்.டி.குமாரசாமி நம்பிக்கை
Jun 03, 2024, 2:24 pm IST

பீகார் முதல்வர் பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எக்ஸிட் போல் முடிவுகள் வெளியான பிறகு டெல்லி சென்ற நிதிஷ்குமார் பிரதமர் மோடியுடன் ஆலோசனை. நிதிஷ்குமாருக்கு மத்திய அமைச்சர் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Jun 03, 2024, 1:39 pm IST

பொறுத்திருந்து பாருங்கள்.. கருத்துக் கணிப்புகளைத் தேர்தல் முடிவுகள் பொய்யாக்கும். நிச்சயம் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்குச் சாதகமாக அமையும்- எக்ஸிட் போல் சர்வே குறித்து கேள்விக்கு சோனியா காந்தி பதில்
Jun 03, 2024, 11:38 am IST

எக்ஸிட் போல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியான நிலையில், இன்று இந்திய பங்குச்சந்தைகள் புதிய உச்சம் தொட்டுள்ளன. காலை 11.30 மணியளவில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 650 புள்ளிகள் உயர்ந்து 23,189இல் வர்த்தகமாகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2200 புள்ளிகள் உயர்ந்து 76,156க்கு வர்த்தகமாகிறது.
Jun 03, 2024, 10:44 am IST

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக 40% வாக்குகளையும் காங்கிரஸ் 23% வாக்குகளையும் பெறும். குறிப்பாக பாஜக இந்த முறை கூடுதலாக 3% இடங்களில் வெல்ல வாய்ப்பு- லோக்நிதி எக்ஸிட் போல் சர்வேயில் தகவல்
Jun 03, 2024, 10:08 am IST

வாக்கு எண்ணிக்கையின்போது நடக்கும் தில்லுமுல்லுகளை நியாயப்படுத்தவே பாஜகவுக்கு சாதகமாக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன- பிரபல பொருளாதார வல்லுநர் பரகல பிரபாகர் விமர்சனம்
Jun 03, 2024, 10:07 am IST

கடந்த தேர்தல்களை காட்டிலும் காங்கிரஸ் கூடுதல் வாக்குகளை பெறும் என்ற போதிலும் அது பாஜக ஆட்சி அமைப்பதை தடுக்காது என்று லோக்நிதி-சி.எஸ்.டி.எஸ் அமைப்பு நடத்திய எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
Jun 03, 2024, 8:55 am IST

ஒடிசா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிக மோசமான தோல்வியை சந்திக்கும் என்று India Today-Axis My India தகவல்.. ஒடிசாவில் 147 தொகுதிகள் இருக்கும் நிலையில், காங்கிரஸ் 5 முதல் 8 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று India Today-Axis My India எக்ஸிட் போல் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
Jun 03, 2024, 8:17 am IST

ஒடிசா சட்டசபை தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம், பாஜக இடையே கடும் போட்டி நிலவுவதாக India Today-Axis My India எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.. பிஜு ஜனதா தளம் மற்றும் பாஜக இரண்டுமே 62-80 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
Jun 03, 2024, 7:43 am IST

நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று செய்தியாளர்களைச் சந்திக்கிறார். இன்று பிற்பகல் செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் தொடர்பாக முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Jun 03, 2024, 6:42 am IST

2016, 2021 மேற்கு வங்க சட்டசபை தேர்தல், 2019 லோக்சபா தேர்தலில் எக்சிட் போல்கள் எந்தளவு தப்பாக இருந்தது என்பதை நாங்கள் பார்த்துள்ளோம். கணிப்புகள் எதுவும் உண்மையாகவில்லை. இவை 2 மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்ட ஒன்று.. இதற்கு எந்தவொரு மதிப்பும் இல்லை- மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம்
Jun 02, 2024, 11:09 pm IST

லோக்சபா தேர்தல் முடிவு குறித்து வெளிவந்துள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் எல்லாம் கணிப்புகள் அல்ல திணிப்புகள் என்றும், தமிழகம் முழுவதும் அதிமுக கணிசமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். மேலும் அவர் கூறுகையில், திண்டுக்கல் தொகுதியை பொறுத்தவரை அதிமுக கூட்டணி வேட்பாளர் முகமது முபாரக் அமோக வெற்றி பெறுவார் என்று கூறினார்.
Jun 02, 2024, 9:59 pm IST

தமிழ்நாடு மட்டும் அல்லாது, இந்தியா முழுவதும் மோடிக்கு எதிரான வெறுப்பு அலையை பார்த்தோம். தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கணிப்பு முழுக்க முழுக்க சித்தரிக்கப்பட்ட ஒன்று. ஜனநாயகம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது - நீலகிரி திமுக எம்பி ஆராசா
Jun 02, 2024, 9:16 pm IST

கடந்த ஆண்டில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கரில் பாஜக பெற்ற வெற்றியை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் சொல்லவில்லை. மேற்கு வங்கத்தில் சரியாக இருந்ததா? எக்சிட் போலை விட மக்களின் கணிப்பே முக்கியமானது. எங்களின் மதிப்பின் படி 290-295 வரை நாங்கள் வெற்றி பெறுவோம் என நம்புகிறோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மனு சிங்வி
Jun 02, 2024, 9:00 pm IST

முதலில் தபால் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் இந்தியா கூட்டணி மனு அளித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
Jun 02, 2024, 8:16 pm IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. கடந்த ஆண்டு சண்டிகரில் நாங்கள் (காங்கிரஸ்) வெற்றி பெறுவோம் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின. ஆனால், வாக்கு எண்ணிக்கையில், நாங்கள் தோல்வி அடைந்தோம். எனது கருத்து என்னவென்றால்.. கேரள மக்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளுக்காக பல வாரங்களாக காத்திருக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் காத்திருப்பார்கள். சில நம்பர்கள் நம்புவதற்கு கடினமாக உள்ளது. எனவே, 4 ஆம் தேதி காத்திருப்பதே சிறந்தது - காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்
Jun 02, 2024, 7:39 pm IST

2021 சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்றே கூறின. ஆனால், தேர்தல் முடிவுகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வென்றது. தேர்தல்களில் மக்களையே நாங்கள் நம்புகிறோம். கருத்துக்கணிப்புகளை அல்ல. மேற்கு வங்கத்தில் 30 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் - திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தனு சென் பேட்டி
Jun 02, 2024, 7:02 pm IST

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் மோசடியானது. இந்தியா கூட்டணி 295 முதல் 310 இடங்கள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது நிச்சயம் என சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
Jun 02, 2024, 6:43 pm IST

கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்துக்கணிப்பை பாஜக செய்துள்ளது. ஜூன் 4-ல் வாக்கு முடிவுகள் வெளியாகவுள்ளது. அதில் நிச்சயம் மாற்றம் ஏற்படும் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+