தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி இல்லை? இன்று 100 வேட்பாளர்களை அறிவிக்கும் பாஜக
டெல்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை பாஜக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது. முதல் கட்ட பட்டியலில் பிரதமர் மோடி- வாரணாசி, மத்திய அமைச்சர் அமித்ஷா- காந்திநகர், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் - லக்னோ தொகுதிகளில் போட்டியிடுவர் என அறிவிக்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
18-வது லோக்சபா தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அடுத்து வரும் சில நாட்களில் வெளியிடக் கூடும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டவை கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையை நிறைவு செய்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து வேட்பாளர்களை அறிவிப்பதிலும் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று இரவு பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 4 மணிநேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டதாகவும் இந்த பட்டியல் இன்று வெளியாகும் எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட இருக்கிறதாம். பிரதமர் மோடி மீண்டும் உ.பி. வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறாராம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குஜராத்தின் காந்தி நகரிலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. லக்னோ தொகுதியிலும் போட்டியிடக் கூடுமாம்.
முன்னதாக பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் ராமநாதபுரத்தில் போட்டியிடுவார் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் தற்போதைய தகவல்களின்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் மட்டும் போட்டியிடுவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
மேலும் தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ள மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், பூபேந்தர் யாதவ், ஜோதிராதித்ய சிந்தியா, முரளீதரன் சர்பானந்த் சோனோவால் உள்ளிட்டோரும் லோக்சபா தேர்தலில் வேட்பாளர்களாக களமிறக்கப்பட உள்ளனராம். இப்பட்டியலில் நிறைய புதுமுகங்கள், பெண்களுக்கு முக்கியத்துவம் தரப்பட இருக்கிறதாம். உதாரணமாக மேற்கு வங்க மாநிலம் அன்சோலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கும் நடிகர் சத்ருகன் சின்ஹாவுக்கு எதிராக போஜ்பூரி நடிகர் பவன் சிங்கை களமிறக்கவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம்.
அத்துடன் 2019 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிக்குப் போராடிய தொகுதிகள், தோல்வி அடைந்த தொகுதிகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து பலமான வேட்பாளர்களை களமிறக்குவது எனவும் பாஜக திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications