லோக்சபா தேர்தல்: மார்ச் 9-க்கு பின் தேதி அறிவிப்பு?ஆந்திரா உட்பட 4 மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல்!
டெல்லி: நாட்டின் 18-வது லோக்சபா தேர்தல் தேதியை மார்ச் 9-ந் தேதிக்குப் பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிஷா மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
17-வது லோக்சபா பதவி காலம் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து 18-வது லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் லோக்சபா தேர்தல் ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதேபோல ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம், ஒடிஷா ஆகிய 4 மாநில சட்டசபைகளின் பதவி காலமும் ஏப்ரல்- மே மாதங்களில் முடிவடைகிறது. இதனால் இந்த 4 மாநிலங்களுக்கும் லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெறும் என்பது எதிர்பார்ப்பு. மேலும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வுகளை நடத்திய நிலையில் மார்ச் 9-ந் தேதிக்குப் பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படக் கூடும் என்கின்றன டெல்லி தகவல்கள். கடந்த 17-வது லோக்சபா தேர்தலைப் போலவே ஏப்ரல் மாதம் 2-வது வாரம் தொடங்கி மே 2-வது வாரம் வரை பல்வேறு கட்டங்களாக லோக்சபா மற்றும் 4 மாநில சட்டசபை தேர்தல்களை தேர்தல் ஆணையம் நடத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
18-வது லோக்சபா தேர்தலில் மொத்தம் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டில் 39 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் 7 தனித் தொகுதிகள். 18-வது லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் வாக்களிக்க உள்ள வாக்காளர்கள் மொத்த எண்ணிக்கை 6,18,90,034. இவர்களில் பெண்கள் 3,14,85,724; ஆண்கள் 3,03,96,330; 3-ம் பாலினத்தவர் 8,294, மாற்றுத்திறனாளிகள் 4,32,805 உள்ளனர். 2019-ம் ஆண்டு 17-வது லோக்சபா தேர்தலில் 71.87% வாக்குகள் பதிவாகி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications