ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்.. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு ஸ்பெஷல் இதுதான்
டெல்லி: ஏழை பெண்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் செலுத்தப்படும். மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்பன போன்ற முக்கிய அறிவிப்புகளை காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மகளிருக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் விவரம் வருமாறு:
வரும் லோக்சபா தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டள்ளது. இதில் பெண்களை கவரும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு:

* மகாலட்சுமி திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஏழை குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த பணம் பெண்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஒவ்வொரு ஆண்டும் நடவடிக்கை எடுக்கப்படும்.
* சட்டபை மற்றும் லோக்சபாவில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் 2029ல் பாஜக கொண்டு வருவதாக கூறியுள்ளது. ஆனால் காங்கிரஸ் சட்டசபையில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2025ம் ஆண்டிலும், லோக்சபாவில் 3ல் ஒருபங்கு பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 2029லும் கொண்டு வரும்.
* மத்திய அரசு பணியில் 2025ம் ஆண்டு முதல் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
* பெண்கள் நீதிபதிகள், அரசு செயலாளர்கள், காவல்துறை பொறுப்புகளில் நியமனம் செய்யப்படுவார்கள்.
* பெண்களுக்கான ஊதிய முரண்பாடு களையப்படும். ஆண்களை போல் பெண்களுக்கும் சமஊதியம் வழங்கப்படும்.
* ‛அதிகார் மைத்ரி' திட்டத்தின்படி அனைத்து பஞ்சாயத்துகளிலும் பெண்களுக்கான சட்ட உரிமை சொல்லி கொடுக்கவும், ஏதேனும் பிரச்சனை வந்தால் அதனை எதிர்கொள்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்க சட்ட நிபுணர் நியமனம் செய்யப்படுவார்.
* ‛சாவித்ரி பாய் ஃபுலே விடுதி' திட்டத்தில் நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவது. குறைந்தபட்சம் ஒரு மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த 5 வாக்குறுதிகளும் இன்றைய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ளது.












Click it and Unblock the Notifications