இது மோடி சுனாமி.. லோக்சபா தேர்தலில் 377 இடங்களை வெல்லும் பாஜக! ‛இந்தியா’ கூட்டணிக்கு ஷாக் - சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடியின் சுனாமி அலையால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக தான் வெற்றி பெற்று மத்தியில் 3வது முறையாக ஆட்சியை பிடிக்கும்.‛இந்தியா' கூட்டணிக்கு வெறும் இரட்டை இலக்கத்தில் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி, ‛இந்தியா' கூட்டணி, இரு கூட்டணியில் இணையாத கட்சிகள் வெல்லும் இடங்களின் எண்ணிக்கை விபரம் வெளியாகி உள்ளது.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. மார்ச் மாதம் தொடக்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மாநிலம் வாரியாக தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.

Lok Sabha Election 2024: Zee News-Matriz Opinion Polls says NDA will Win 377 Seats and INDIA Bloc gets 94 only

இதனால் நாடு முழுவதும் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. அரசியல் கட்சிகள் அனைத்தும் கால்களில் சக்கரம் கட்டிக்கொண்டு வியூகம் வகுத்து வருகின்றன. கூட்டணி அமைப்பது, கூட்டணி கட்சிகளுடன் பேசி தொகுதி பங்கீடு செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கி விட்டன.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளில் வெல்லவும், தனது தலைமையிலான என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் எனவும் இலக்கு நிர்ணயித்துள்ளது. மறுபுறம் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் 26 கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன. மேற்கு வங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ‛இந்தியா' கூட்டணியில் பிரச்சனை இருந்தாலும் பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளன.

இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் கருத்து கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஜி நியூஸ்-மேட்ரிஸ் சார்பில் கடந்த 5ம் தேதி முதல் 27 ம் தேதி வரை நாடு முழவதம் 543 தொகுதிகளில் மக்களிடம் கருத்துகள் கேட்டு கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டது. 87 ஆயிரம் பெண்கள், 54 ஆயிரம் ஆண்கள் என மொத்தம் 1,67,843 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்தியில் வழக்கம்போல் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக 300க்கும் அதிகமான இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 400 தொகுதகிளிலும் வெல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய சாத்தியம் என்பது இல்லை என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்தியில் வழக்கம்போல் தனித்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு பாஜக 300க்கும் அதிகமான இடங்களை வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் பாஜக 370 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 400 தொகுதிகளிலும் வெல்ல இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைய சாத்தியம் என்பது இல்லை என இந்த கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளையில் மத்தியில் 3வது முறையாக பாஜக அரியணை ஏறுவதை தடுக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணிக்கு வரும் தேர்தலிலும் பின்னடைவு தான் ஏற்படும் என இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது. அதன்படி ‛இந்தியா' கூட்டணி 94 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 94 தொகுதிகளில் மட்டும் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி பாஜகவின் என்டிஏ கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியில் இடம்பெறாத கட்சியினர் 72 தொகுதிகளில் வெற்றி பெறுவார்கள் என ஜி நியூஸ்-மேட்ரிஸ் கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று 3வது முறையாக அரியணை ஏறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+