4ம் கட்ட லோக்சபா தேர்தல்: 96 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு! 62.9% வாக்குகள் பதிவு
நமது நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே 3 கட்ட தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மொத்தம் 96 லோக்சபா தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலையில் வரிசையில் மக்கள் நின்றதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.
எந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகள்: ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள், தெலங்கானாவில் 17 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் தலா 8 தொகுதிகளில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் தலா 4 தொகுதிகளில், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
எத்தனை வேட்பாளர்கள்: மொத்தம் 10 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் மொத்தம் 1717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த 4ஆம் கட்ட தேர்தல் நடக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
வாக்காளர்கள்: இந்த தேர்தலில் மொத்தம் 8.97 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் 8.73 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 17.70 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மேலும், இன்று பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 12.49 லட்சத்திற்கும் அதிகமானோர் 85 வயதைத் தாண்டியவர்களாக உள்ளனர். மேலும், 19.99 லட்சம் பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர்.
நட்சத்திர வேட்பாளர்கள்: இதில் மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்... இதில் அகிலேஷ் யாதவ் (உத்தரப் பிரதேசம்), மஹுவா மொய்த்ரா (மேற்கு வங்கம்) கிரிராஜ் சிங் (பீகார்) ஒய்.எஸ்.சர்மிளா (ஆந்திரப் பிரதேசம்), சத்ருகன் சின்ஹா (மேற்கு வங்காளம்), ஓவைசி(தெலுங்கானா) என பல நட்சத்திர வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இந்த 96 தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்புடன் நடந்தது. காலை நேரத்திலேயே பொதுமக்கள் வாக்களிக்க ஆர்வமாகக் குவிந்தனர். இதில் காலை 9 மணி வரை 10.35% வாக்குகள் பதிவாகியது.
மாநில வாரியாக தகவல்: காலை 9 மணி வரை ஆந்திரா- 9.05%, பீகார்- 10.18%, ஜம்மு காஷ்மீர்- 5.07%, ஜார்க்கண்ட்- 11.78%, மத்தியப் பிரதேசம்- 14.97%, மகாராஷ்டிரா- 6.45%, ஒடிஷா- 9.23%, தெலுங்கானா- 9.51%, உத்தரப்பிரதேசம்- 11.67%, மேற்கு வங்கம்- 15.24% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பகல் ஒரு மணி வரை ஆந்திரா 40.26%, பீகார் 34.44%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 23.57%, ஜார்கண்ட் 43.80%, மத்தியப் பிரதேசம் 48.52%, மகாராஷ்டிரா 30.85%, ஒடிஷா 39.30%, தெலுங்கானா 40.38%, உத்தரப் பிரதேசம் 39.68%, மேற்கு வங்கம் 51.87% வாக்குகள் பதிவாகியுள்ளன.
பிற்பகல் 3 மணி வரை ஆந்திரா 55.49%, பீகார் 45.23%, ஜம்மு மற்றும் காஷ்மீர் 29.93%, ஜார்கண்ட் 56.42%, மத்தியப் பிரதேசம் 59.63%, மகாராஷ்டிரா 42.35%, ஒடிஷா 52.91%, தெலுங்கானா 52.34%, உத்தரப் பிரதேசம் 48.41%, மேற்கு வங்கம் 66.05% வாக்குகள் பதிவானாகியுள்ளன.
மாலை 5 மணி நிலவரப்படி, 62.31 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 75.66 சதவீத வாக்குகள் பதிவானது. குறைந்தபட்சமாக ஜம்மு காஷ்மீரில் 35.75 சதவீத வாக்குகள் பதிவானது.
5 மணி நிலவரப்படி,
ஆந்திர பிரதேஷ் - 68.04 %
பீகார் - 54.14 %
ஜம்மு காஷ்மீர்- 35.75%
ஜார்க்கண்ட் - 63.14%
மத்தியபிரதேசம் - 68.01%
மகாராஷ்டிரா - 52.49%
ஒடிசா - 62.96%
தெலுங்கானா - 61.16%
உத்தர பிரதேசம் - 56.35%
மேற்கு வங்கம்- 75.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் 4 ஆம் கட்ட லோக்சபா தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 6 மணி நிலவரப்படி 62.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோராய வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
-
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications