சுஷ்மா ஸ்வராஜ் மகள் பாஜக வேட்பாளரானது எப்படி தெரியுமா? ஆம் ஆத்மி அடுக்கும் படுபயங்கர சம்பவங்கள்!
டெல்லி: புது டெல்லி லோக்சபா தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ்-க்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி அடுக்கடுக்கான பயங்கர புகார்களை முன்வைத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை சனிக்கிழமை இரவு வெளியிட்டது பாஜக. மொத்தம் 195 வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் போட்டியிடும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டன.

பாஜகவின் இந்த வேட்பாளர்கள் பட்டியல் அக்கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவின் மேற்கு வங்கம் அன்சோல் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பவன் சிங், தாம் போட்டியிட முடியாது என அறிவித்துவிட்டார். தங்களை வேட்பாளர்களாக அறிவிக்கவில்லை என்பதால் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக முன்னாள் மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், மாஜி கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் கோட்சேவை புகழ்ந்து பேசியதால் பிரதமர் மோடியால் மன்னிக்கவே முடியாது என கோபத்துக்குள்ளான பெண் சாமியார் சாத்வி பிரக்யா சிங் தாக்கூரும் அதிருப்தியில் இருக்கிறார். குஜராத் மாநிலத்தில் மேஹ்சனா தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவிக்கவே கூடாது என இப்போதே அறிவித்துவிட்டார் அம்மாநில முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல்.
தற்போது பாஜகவின் புதுடெல்லி லோக்சபா தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பன்சூரி ஸ்வராஜ் மீது டெல்லி ஆளும் ஆம் ஆத்மி அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளது. இதனால் பன்சூரி ஸ்வராஜை வேட்பாளராக அறிவித்ததை பாஜக திரும்பப் பெற கோருகிறது ஆம் ஆத்மி. மன்சூரி ஸ்வராஜ் மீது டெல்லி அமைச்சர் அதிஷி முன்வைத்த குற்ற்றச்சாட்டுகளின் தொகுப்பு:
லலித் மோடி விவகாரம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தொடங்கி வைத்தவர் லலித் மோடி. ஆனால் லலித் மோடி மீது பண மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் வரிசைக் கட்டி விஸ்வரூபம் எடுத்தன. இதனால் இந்தியாவை விட்டே தப்பி ஓடி லண்டனில் வசித்து வருகிறார் லலித் மோடி. இந்த லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்குக்காக கீழ் நீதிமன்றம் முதல் சுப்ரீம் கோர்ட் வரை வாதாடியவர்தான் சுஸ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வாராஜாம்.
மணிப்பூர் பெண்கள் நிர்வாணம்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனத்தினரிடையே ஓராண்டுக்கும் மேலாக தொடர் மோதல் நிகழ்ந்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். மைத்தேயி வன்முறை கும்பலால் குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ ஒட்டுமொத்த தேசத்தையே நிலைகுலைய வைத்தது. இந்த சம்பவத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் பன்சூரி ஸ்வராஜ். இப்போது எப்படி டெல்லி பெண்களிடம் ஓட்டு கேட்டு வருகிறாராம்? என்கிறது ஆம் ஆத்மி.
சண்டிகர் மேயர் தேர்தல்: உச்சநீதிமன்றத்தால் ஜனநாயகப் படுகொலை என கடுமையாக விமர்சிக்கப்பட்ட சம்பவம்தான் சண்டிகர் மேயர் தேர்தல். அத்தேர்தலில் பாஜகவின் தேர்தல் அதிகாரி சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்ட வீடியோ வெளியாகி உச்சநீதிமன்றத்துக்கு வரவழைக்கப்பட்டு கண்டனத்துக்குள்ளானவர். இந்த சம்பவத்திலும் பாஜகவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் பன்சூரி ஸ்வராஜ்.
என்ன செய்ய வேண்டும்?: இத்தகைய தேசவிரோத சக்திகளுக்காக வாதாடி வரும் பன்சூரி ஸ்வராஜை பாஜக வேட்பாளராக அறிவித்ததை திரும்பப் பெற வேண்டும் என்பது ஆம் ஆத்மியின் கோரிக்கை. ஆனால் இதனை பன்சூரி ஸ்வராஜ் நிராகரித்துள்ளார்.
பன்சூரி ஸ்வராஜ்: தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த பன்சூரி ஸ்வராஜ், ஆம் ஆத்மி சொல்லும் காரணங்களுக்காக தாம் பாஜகவின் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. தம்மை ஆம் ஆத்மி குண்டர்கள் கொடூரமாக தாக்கிய காரணத்தாலேயே தாம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டேன் என்கிறார்.
ஓயாத அலைகள்தான்!
-
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை போய்ட்டாரு.. ஆந்திராவில் எதுக்கு ராஜ்யசபா சீட்டு.. கைவிட்ட பாஜக -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications