தென்னிந்தியா 132 தொகுதிகளில் பாஜகவுக்கு கால்வாசி சீட் கூட தேறாதாம்- டெல்லிக்கு ஷாக் கொடுத்த சர்வே!
டெல்லி : லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்களின் மொத்தம் 132 தொகுதிகளில் பாஜகவுக்கு மிக மிக அதிகபட்சமாக 34 இடங்கள்தான் கிடைக்கும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு முடிவுகள்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன. தேசிய அளவிலான "இந்தியா" கூட்டணி தமிழ்நாட்டில் திமுக தலைமையில் வலிமையாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை அதிமுக ஒரு அணியாகவும் பாஜக ஒரு அணியாகவும் தனித்தே களம் காண்கின்றன. அதிமுக அணியில் தேமுதிக, புதிய தமிழகம், எஸ்டிபிஐ கட்சிகள்தான் உள்ளன. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக, அதிமுக, பாஜக அணிகள் இல்லாமல் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டி என களத்தில் நிற்கிறது.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் 4 முனைப் போட்டியை எதிர்கொண்டிருக்கிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுவிட்டது. ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்று ஜூன் 4-ந் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் களம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான கருத்து கணிப்பை Lok Poll நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 லோக்சபா தொகுதிகளில் திமுக கூட்டணி 34 முதல் 37 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது Lok Poll கருத்து கணிப்பு,
அண்ணா திமுக கூட்டணிக்கு மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 1 முதல் 3 தொகுதிகள் கிடைக்கக் கூடும் என்கிறது இந்த கணிப்பு.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 0 முதல் அதிகபட்சமாக 1 தொகுதிதான் கிடைக்குமாம். இதர கட்சிகளுக்கு 0 முதல் 1 தொகுதிக்கு வாய்ப்புள்ளதாகவும் இக்கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மொத்தம் 39 தொகுதிகள்
திமுக கூட்டணி 34-37
அதிமுக 1-3
பாஜக 0-1
இதர 0-1
தென்னிந்திய மாநிலங்களில் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திராவில் பாஜக மிக அதிகபட்சம் 34 தொகுதிகளைக் கைப்பற்றக் கூடும என்பதும் கர்நாடகாவில் 10 முதல் 12 தொகுதிகளைப் பெறக் கூடும் என்பது கருத்து கணிப்பு முடிவு. கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜகதான்.
கர்நாடகா மொத்த இடங்கள் : 28
காங்கிரஸ் 12 - 14 இடங்கள்
பாஜக 10 - 12 இடங்கள்
ஜேடிஎஸ் 1- 2 இடங்கள்
கர்நாடகாவில் இம்முறை காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்கிறது இத்தேர்தல் கருத்து கணிப்பு.
கேரளாவில் மொத்த இடங்கள் 20
காங்கிரஸ்
18 - 20
பாஜக 0 - 1
கேரளாவில் ஒட்டுமொத்த இடங்களையும் காங்கிரஸ்தான் கைப்பற்றும் என்கிறது இக்கருத்து கணிப்பு. கேரளாவில் காங்கிரஸ் vs இடதுசாரிகள் என்கிற நிலைமை உள்ளது. இரு கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இருந்தாலும் தனித்து களம் காண்கின்றன.
இதேபோல தெலுங்கானாவிலும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான் காத்திருக்கிறது இக்கருத்து கணிப்பு.
தெலுங்கானா மொத்தம் 17 இடங்கள்
காங்கிரஸ் 10 - 12
பாஜக 2 - 4
பிஆர்எஸ் 1 - 2
இதர கட்சிகள் 0 - 1
தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. காங்கிரஸ், பிஆர்எஸ், பாஜக ஆகியவை களத்தில் உள்ளன.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஜெகன் ராஜ்ஜியமே தொடருமாம். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பாஜக இணைந்து கூட்டணி அமைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாக தென்னிந்தியாவில் மொத்தம் 132 தொகுதிகள் உள்ளன.
தென்னிந்தியாவில் கருத்து கணிப்பு முடிவுகள்
காங்கிரஸ்- இந்தியா கூட்டணி 78-82
பாஜக தேசிய ஜனநாயகக் கூட்டணி 28 - 34
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 10 - 11
அதிமுக 1 - 3
இதர கட்சிகள் 1 - 3












Click it and Unblock the Notifications