ஏமாற்றிய பாஜக.. பெரும்பான்மை கிடைக்காததால் சோகம்.. டிவியை தூக்கி போட்டு உடைத்து பாஜக தொண்டர் ஆவேசம்!
டெல்லி : லோக்சபா தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் ஏமாற்றமடைந்த தொண்டர் ஒருவர், டிவியை உடைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி பாஜக கூட்டணி 290 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 235 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 18 தொகுதிகளிலும் வென்றுள்ளன. இருந்தாலும் பாஜக தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழல் உள்ளது.

பாஜக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆகிய கட்சிகளின் ஆதரவு அவசியம் தேவை என்ற நிலை உள்ளது. லோக்சபா தேர்தலின் போது பாஜக நிச்சயம் 350 தொகுதிகளுக்கு மேல் வெற்றிபெறும் என்றும், பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெல்லும் என்று பாஜக தலைவர்கள் பேசி வந்தனர்.
அதற்கேற்ப தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜகவுக்கு சாதகமாக அமைந்தன. பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் பாஜக 360 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று கணிக்கப்பட்டிருந்தன. தற்போது தேர்தல் முடிவுகள் எக்ஸிட் போல் முடிவுகள், பாஜக தலைவர்கள் அனைவரும் கூறியது போல் அல்லாமல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள் மக்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாகவும், இந்த தேர்தல் பாஜகவுக்கு மக்கள் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளனர் என்றும் விமர்சித்து வருகின்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர். பாஜக கூட்டணி ஆட்சியமைக்க முடியும் என்ற போதும், பாஜக அலுவலகங்களிலேயே பெரிதாக கொண்டாட்டங்கள் இல்லை.
இந்த நிலையில் பாஜக 300 தொகுதிகளுக்கு கீழ் முன்னிலையை இழந்தததை ஏற்க முடியாமல் பாஜக தொண்டர் ஒருவர், பார்த்து கொண்டிருந்த டிவியை தூக்கி போட்டு உடைத்துள்ளார். இதனை சக பாஜக தொண்டர்கள் தடுக்க முயன்ற போதும், அவர் உடைப்பதை நிறுத்தவில்லை. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.












Click it and Unblock the Notifications