நாடே எதிர்பார்க்கும் 4ஆம் கட்ட தேர்தல்..உதவுமா உபி? ஓங்குமா ஒடிசா? எத்தனை தொகுதிகளில் தேர்தல்?
டெல்லி: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது. தேர்தலை சந்திக்கும் 10 மாநிலங்களில் இதுவரை வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள தொகுதிகள்.. இனி வாக்குப்பதிவு நடக்கப்போகும் தொகுதிகள் எவை என விரிவாக பார்க்கலாம்..
இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மக்களவைத் தேர்தலானது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று கட்ட தேர்தல்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் அடுத்து நான்கு கட்ட தேர்தல்கள் நடைபெற இருக்கிறது.

ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது இந்திய ஜனநாயகத்தின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கிறது.
மக்களவை தேர்தல்: ஏற்கனவே ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் நாளை 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நான்காவது கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதோடு சேர்த்து ஆந்திராவுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது. மேலும் ஒடிசாவில் முதல் கட்டமாக 28 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை பொருத்தவரை ஆந்திராவில் 25 தொகுதிகளும், தெலுங்கானாவில் 17 தொகுதிகளும், பிஹாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேச மாநிலத்தில் 8 தொகுதிகளும் நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன.
4ஆம் கட்ட தேர்தல்: இவை மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் 11 தொகுதிகள், ஒடிசாவில் நான்கு தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் எட்டு தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தலை சந்திக்கின்றன. ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
வாக்குப் பதிவு: தெலுங்கானாவில் 17 தொகுதிகள் தேர்தலை சந்திக்கின்றன. பீகாரில் மொத்தம் உள்ள 40 தொகுதிகள் இருக்கும் நிலையில் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் நாளை 5 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதேபோல ஜார்கண்டில் 14 தொகுதிகள் இருக்கும் நிலையில் நாளை 4 தொகுதிகளுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகள் இருக்கும் நிலையில் 21 தொகுதிகளில் ஏற்கனவே வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது இதை அடுத்து எட்டு தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.
எத்தனை தொகுதிகள்: இதேபோல மகராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகள் இருக்கும் நிலையில் இதுவரை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்து இருக்கிறது. நாளை நான்காம் கட்ட வாக்குப்பதிவில் அங்கு 11 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. ஒடிசா மாநிலத்தில் 21 மக்களவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் நாளை 4 தொகுதிகளில் மட்டுமே வாக்குப்பதிவு நடக்கிறது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கும் நிலையில் 26 தொகுதிகளில் இதுவரை வாக்குப்பதிவு நடந்திருக்கிறது. 13 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
நட்சத்திர வேட்பாளர்கள்: மேற்குவங்க மாநிலத்தில் 42 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இதுவரை தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேலும் நாளை எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை மொத்தமுள்ள ஐந்து தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் நாளை ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அகிலேஷ் யாதவ், மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் தேர்தலை சந்திக்கின்றனர்.
பலத்த பாதுகாப்பு: தேர்தலை ஒட்டி மேற்கண்ட 10 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது துணை ராணுவத்தினருடன் உள்ளூர் காவல்துறையினரும் இணைந்து தேர்தலை நடத்த தீவிரம் காட்டி வருகின்றனர் தேர்தல் ஆணையமும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications