செம ட்விஸ்ட்.. மகாராஷ்டிராவில் பாஜகவை பக்கத்தில் விரட்டி வரும் காங்கிரஸ்! சி வோட்டர் கணிப்பு
டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு, காங்கிரஸ் பயங்கர டஃப் கொடுக்கும் என்று ஏபிபி-சி வோட்டர் கருத்துக்கணிப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்துள்ளன. இந்த லோக்சபா தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் மிக முக்கியமானதாகும்.

பாஜகவை பொறுத்த அளவில், மோடி மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமையை அவர் பெறுவார். அதேபோல, 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம்.
காங்கிரஸை பொறுத்த அளவில் ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் குலாம் நபி ஆசாத் தொடங்கி பல்வேறு தலைவர்கள் கட்சியை விட்டு விலகி சென்றுள்ளனர். பல மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்திருக்கிறது. எனவே இந்த முறை மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் கட்சி இருக்கிறது. எனவே ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் என முரண்பட்ட கட்சிகளை இந்தியா கூட்டணி என இணைத்து தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. இதனையடுத்து தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.
வாக்குச்சாவடிகளில் வாக்களித்துவிட்டு வரும் ஒவ்வொரு 10 வாக்காளர்களில் ஒருவரிடம், யாருக்கு வாக்களித்தீர்கள் என்கிற விவரம் கேட்கப்படும். அவர் கூற விரும்பும் பட்சத்தில் இப்படியாக தரவுகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து கருத்து கணிப்புகளாக வெளியிடப்படும். சி-வோட்டர், ஆக்சிஸ் மை இந்தியா, சிஎன்எக்ஸ் ஆகிய அமைப்புகள் கருத்துக்கணிப்பு நடத்தும் அமைப்புகளில் முக்கியமானதாக கருதப்படுகிறது. இது தவிர ஏராளமான மீடியாக்கள் கருத்துக்கணிப்பை வெளியிடுகின்றன.
அந்த வகையில் தற்போது ஏபிபி-சி வோட்டர் கருத்துக்கிணப்பை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 48 தொகுதிகளில், பாஜக 22-26 தொகுதிகளிலும், காங்கிரஸ் 23-25 தொகுதிகளிலும் வெற்றிப் பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகாராஷ்ராவில் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி, மே 20ம் தேதி வரை 5 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த 2019 தேர்தலில் பாஜக 23 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகள் 18லும், தேசியவாத காங்கிரஸ் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications