இந்தியாவின் முக்கிய கட்சியாக உருவெடுக்கும் திமுக.. எல்லா கருத்து கணிப்பும் இதைத்தான் சொல்கிறது!
டெல்லி: 2019 லோக் சபா தேர்தலுக்கு பின் இந்திய அளவில் மிகப்பெரிய கட்சியாக திமுக கட்சி உருவெடுக்கும் என்று பல்வேறு கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக தமிழகத்தில் பெரிய வெற்றியை பெறும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் பரபரப்பு தினமும் கூடிக்கொண்டே செல்கிறது. தமிழகத்திலும் கூட்டணி பேச்சுவார்த்தை உச்சம் அடைந்துள்ளது.
தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதியிலும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் வெல்லும் என்று அனைத்து கருத்து கணிப்புகளிலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதலில் வந்த இரண்டு
ரிபப்ளிக் டீவியின் கருத்து கணிப்பின்படி தமிழகத்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெல்லாது. காங்கிரஸ் - திமுகவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 (புதுச்சேரி 1) தொகுதிகளை வெல்லும்.
ஏபிபி சி வோட்டர் சர்வேயிலும் இதேதான் கூறப்பட்டு இருக்கிறது. லோக் சபா தேர்தலில் திமுகதான் மொத்தமாக வெற்றிபெறும். அதாவது திமுக - காங்கிரஸ் - சிறிய கட்சிகளின் கூட்டணி மொத்தம் 40 இடங்களில் வெல்லும்.

அடுத்த இரண்டு
மேலும் இந்தியா டுடே கார்வி இன்சைட்ஸ் கருத்து கணிப்பின்படி தமிழகத்தை பொறுத்தவரை 40 இடங்களையும் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
லோக்சபா தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழகம்& புதுச்சேரியில் 40 இடங்களில் 36 இடங்களை திமுக - காங்கிரஸ் கூட்டணி வெல்லும். அதிமுக கூட்டணி 4 இடங்களை வெல்லும். பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் வைக்காவிட்டால் ஒரு இடங்களை கூட வெல்லாது.

பெரிய கட்சி
இதன் மூலம் தமிழகத்தில் திமுக மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்பது உறுதியாகிறது. தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே திமுக பெரிய கட்சியாக மாற வாய்ப்புள்ளது. திமுக தனியாக 30 இடங்களை எடுக்கும் என்பதால் மூன்றாவது பெரிய கட்சியாக வாய்ப்புள்ளது.

அதிமுகவின் இடம்
சென்ற லோக்சபா தேர்தலில் 37 இடங்களை அதிமுக வென்றது. தற்போது அதிமுகதான் லோக் சபாவில் மூன்றாவது பெரிய கட்சி. அந்த இடத்தை திமுக பெற்று சாதனை படைக்க வாய்ப்புள்ளது. அதே சமயம் அதிமுக ஒற்றை இழக்க இடங்களையோ, இல்லை ஒரு இடம் கூட பெறாத நிலையையோ அடைய வாய்ப்புள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications