டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிதிப் பற்றாக்குறை.. எம்.பி.க்கள் ஊதியத்தில் 30% கட்.. லோக்சபாவில் சட்டத் திருத்தம் நிறைவேறியது

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஊதியத்தில் 30 சதவீதம் வரை குறைப்பதற்கான சட்ட திருத்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேறி உள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, நிதிப்பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சமாளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் குறைக்கப்படுவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lok Sabha passes bill to cut salaries of MPs by 30 per cent

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஊதியம், படிகள் மற்றும் ஓய்வூதியம் (சட்டத்திருத்தம்) 2020 என்ற பெயரிலான மசோதா லோக்சபாவில் நேற்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதா இன்று லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து ராஜ்யசபாவில் மசோதா நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் இந்த மசோதா அமலுக்கு வரும்.

நாய் பராமரிக்க ரூ.45ஆயிரம் சம்பளம்... டிகிரி படித்தவர்கள் தேவை - டெல்லி ஐஐடி விளம்பரம் நாய் பராமரிக்க ரூ.45ஆயிரம் சம்பளம்... டிகிரி படித்தவர்கள் தேவை - டெல்லி ஐஐடி விளம்பரம்

அரசிடம் போதிய அளவுக்கு நிதி ஆதாரம் இல்லை என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 6ம் தேதியே மத்திய அமைச்சரவை இதுதொடர்பான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது. அவசர சட்டம் பிறப்பித்த 6 மாதங்களுக்குள் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதனடிப்படையில், நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
Lok Sabha on Tuesday passed a bill to reduce for one year the salaries of MPs by 30 per cent "to meet the exigencies arising out of COVID-19 pandemic". The Salary, Allowances and Pension of Members of Parliament (Amendment) Bill, 2020 was introduced in the Lower House on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X