G RAM G! பெயர் மாற்றப்பட்ட.. 100 நாள் வேலை சட்ட மசோதா.. மக்களவையில் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு பதிலாக, 'விபி ஜி ராம் ஜி' எனும் புதிய திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இதற்கான மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அதன் நகலை எதிர்க்கட்சி எம்பிக்கள் கிழித்து அமைச்சர் மீது வீசி எறிந்தனர்.

இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நள்ளிரவு கடந்து, 1.30 மணி வரை நடைபெற்றிருந்தது. மொத்தம் 98 எம்பிக்கள் இந்த விவாதத்தில் பங்கேற்றிருந்தார்கள். இந்நிலையில் இன்று எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

MGNREGA Lok Sabha

மசோதா மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் விவாதத்திற்கு பதிலளித்து, மசோதாவை நிறைவேற்ற முன் வந்த நிலையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு முழக்கமிட தொடங்கினர். மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவித்ததையடுத்து மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய சட்டத்தின் மூலம் 100 நாட்கள் வேலை என்பதை, 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. மக்களவையில் மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்திருந்த அமைச்சர் சவுகான்,

"பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, காந்தியின் கொள்கைகளை நிஜமாக்க முயன்று வருகிறது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டம், உஜ்வாலா யோஜனா, தூய்மை பாரதம், ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் மூலம் ஏழைகளின் வாழ்வை மேம்படுத்தி காந்தியின் லட்சியங்களை அரசு உண்மையாக்கி வருகிறது. இதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசுதான் காந்தியின் கொள்கைகளை கைவிட்டது" என்று விமர்சித்திருந்தார்.

இந்த மசோதா மீது சுமார் 8 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இருப்பினும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், மசோதா நகலை அமைச்சருக்கு முன்பு கிழித்தெறிந்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர். அதேபோல சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில், இந்த புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியை நடத்தினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு' என்று எழுதப்பட்ட பெரிய பதாகையை ஏந்தியபடி, பிரேர்ணா ஸ்தல் பகுதியில் உள்ள காந்தி சிலையில் இருந்து மகர் துவார் வரை ஊர்வலமாகச் சென்று கோஷங்களை எழுப்பினர்.

இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், திமுக தலைவர்களான கனிமொழி, டி.ஆர். பாலு, ஆ. ராசா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இ.டி. முகமது பஷீர், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) அர்விந்த் சாவந்த், ஆர்.எஸ்.பி-யின் என்.கே. பிரேம்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். மூத்த காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியும் இதில் பங்கேற்றிருந்தார்.

இந்த சட்டம் குறித்து தனது x தளத்தில் பதிவிட்டிருந்த மல்லிகார்ஜுன கார்கே, "மோடி அரசு தேசத்தந்தை மகாத்மா காந்தியை அவமதித்ததுடன், இந்தியாவின் கிராமங்களில் சமூக-பொருளாதார மாற்றத்தைக் கொண்டு வந்த வேலை செய்யும் உரிமையையும் நசுக்கிவிட்டது. ஆளும் சர்வாதிகார அரசாங்கத்தின் இந்த அராஜகத்தை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் இருந்து தெருக்கள் வரை நாங்கள் போராடுவோம்" என குறிப்பிட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+