லோக்சபா தேர்தல்.. டெல்லியில் விளாசும் பாஜக.. ஆட்சியில் இருந்தாலும் ஆம் ஆத்மி "இந்தியா" கூட்டணி பாவம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் அடுத்தாண்டு நடைபெறும் நிலையில், இதில் தலைநகர் டெல்லியில் எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம் என்பது குறித்து டைம்ஸ் நவ் சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கான தேர்தல் பணிகளை பல்வேறு அரசியல் கட்சிகளும் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. ஒரு பக்கம் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கும் முனைப்பில் இறங்குகிறது.

Lok Sabha Poll Times Now survey says BJP will win most seats in capital Delhi

மற்றொருபுறம் காங்கிரஸ், திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து "இந்தியா" என்ற மெகா கூட்டணியை உருவாக்கியுள்ளனர். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க இவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

இதற்கிடையே லோக்சபா தேர்தல் குறித்த டைம்ஸ் நவ் சர்வே வெளியாகியுள்ளது. இந்த சர்வே மாநில வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை இப்போது அங்கு ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. அதில் எந்த கட்சிக்கு அதிக இடங்கள் என்பது குறித்துப் பார்க்கலாம்,

இதில் தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை அங்கே பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு ஆதரவு அதிகமாக இருக்கும் என்று டைம்ஸ் நவ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது. டெல்லியைப் பொறுத்தவரை பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 52.30% வாக்குகள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் "இந்தியா" கூட்டணிக்கு 44.90% வாக்குகளும் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு 2.80% வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் மொத்தம் 7 இடங்கள் இருக்கும் நிலையில், அங்கே பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 5-6 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. "இந்தியா" கூட்டணிக்கு அங்கே 1-2 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது எனக் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்தாலும், பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த முறை என்று இல்லை.. கடந்த 2019 லோக்சபா தேர்தலிலும் சரி, அதற்கு முன்பு நடந்த 2014 லோக்சபா தேர்தலிலும் சரி மொத்தம் இருந்த 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+