லோக்சபா தேர்தல்! தெலுங்கானா, ஆந்திராவில் பாஜக, காங். இரண்டிற்கும் ஷாக்! வெற்றி யாருக்கு! புது சர்வே
டெல்லி: நமது நாட்டில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், இதில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்த டைம்ஸ் நவ் சர்வே இப்போது வெளியாகியுள்ளது.
அடுத்தாண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ரெடியாகி வருகிறது. மோடி தலைமையிலான பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாகத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறது.

மறுபுறம் பல்வேறு எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் வந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி இருக்கிறது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை தடுக்க இவர்கள் இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இப்போதே அரசியல் களம் மெல்லச் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. தேசியளவில் என்டிஏ மற்றும் இந்தியா என இரு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், இரு கூட்டணியிலும் இல்லாத சில கட்சிகள் இருக்கவே செய்கிறது. அப்படி இரு கூட்டணியில் இல்லாத கட்சிகள் வலிமையாக இருக்கும் மாநிலங்கள் தெலுங்கானா மற்றும் ஆந்திரா. இந்த இரு தெலுங்கு பேசும் மாநிலங்களில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து டைம்ஸ் நவ் புதிய சர்வேவை வெளியிட்டுள்ளது.
இதில் ஆந்திர மாநிலத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அதிகமாக உள்ளது. அங்கே மொத்தம் இருக்கும் 25 தொகுதிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அள்ளும் என இந்த டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 24- 25 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 0-1 இடங்கள் மட்டுமே கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு அங்கே ஒரு இடமும் கிடைக்காது என்று டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
அடுத்து மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான தெலுங்கானாவிலும் ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கே அதிக இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது. அங்கே மொத்தமுள்ள 17 இடங்களில் பிஆர்எஸ் கட்சிக்கு 9-11 இடங்கள் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் இந்தியா கூட்டணிக்கு 3-4 இடங்களும், பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு 3-4 இடங்களும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல மற்ற கட்சிகள் 0-1 இடத்தில் மட்டுமே என்று அந்த டைம்ஸ் நவ் சர்வே-இல் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த சர்வே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications