எமோஷனலான ஓம் பிர்லா.. நாடாளுமன்றத்தில் பேசும்போதே தழுதழுத்தார்.. என்ன நடந்தது?
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்ட சூழலில், இவர் இன்று மீண்டும் சபாநாயகராகப் பதவியேற்றார். அப்போது தான் எப்போதும் பாரபட்சமாக நடந்து கொண்டதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதேநேரம் எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவருமே விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்
நாடாளுமன்றத்தில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதற்கிடையே பாரபட்சமாகச் செயல்படுவதாகச் சொல்லி சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவிநீக்கம் செய்ய எதிர்க்கட்சி எம்பிக்கள் நோட்டீஸ் அனுப்பினர். இருப்பினும், இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.

ஓம் பிர்லா
இந்தச் சூழலில் தான் இன்று வியாழக்கிழமை லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மீண்டும் பொறுப்பேற்றார். தனது நடவடிக்கைகள் ஒருதலைபட்சமானவை அல்ல என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர், ஒவ்வொரு உறுப்பினருக்கும் பேச உரிய வாய்ப்பளிப்பதே தமது நோக்கம் எனத் தனது உரையில் குறிப்பிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்றும் பிர்லா தெரிவித்தார்.. ராகுல் காந்தி பெயரைச் சொல்லவில்லை என்றாலும் எதிர்க்கட்சி தலைவர் எனச் சொல்லி ராகுலை விமர்சித்தார்.
மேலானவர் இல்லை
அவர் மேலும், "எதிர்க்கட்சித் தலைவர் அவைக்கு மேலானவர் என்றும், எந்த விஷயத்தையும் பேசலாம் என்றும் சில உறுப்பினர்கள் கருதுகின்றனர். ஆயினும், யாருக்கும் சிறப்புச் சலுகை கிடையாது. சபை விதிகளின்படியே செயல்படும். பிரதமர், அமைச்சர்கள் கூட அவை விதிகளின்படி கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.. அறிவிப்புகளை வெளியிட வேண்டும்" என்றார்.
பின்னணி
புதன்கிழமை லோக்சபாவில் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் சுமார் 12 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இருப்பினும், ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குரல் வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு, பெரும் பரபரப்பை உருவாக்கியது. பட்ஜெட் கூட்டத்தொடரில் ராகுல் காந்திக்கு பேசச் சபாநாயகர் அனுமதி மறுப்பதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
பிப்ரவரியில் முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம். நராவணேயின் சுயசரிதை குறித்துப் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த விவகாரத்தில் எட்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கமானதால் பதட்டம் அதிகரித்தது. இதையடுத்து சபாநாயகரைப் பதவிநீக்கம் நீக்கக் கோரி 118 எம்.பி.க்கள் தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
உருக்கம்
தன்னுடைய செயல்பாடுகள் பாரபட்சமானவை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை ஓம் பிர்லா நிராகரித்தார். அவர் மேலும், "நான் எப்போதும் சபையின் நடவடிக்கைகளை நடுநிலைமை, ஒழுக்கம், சமநிலை மற்றும் விதிகளின்படி நடத்த முயன்றுள்ளேன். எம்.பி.க்களின் மைக்கை தான் கட்டுப்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மைக் இயக்கவோ அல்லது அணைக்கவோ தனக்கு எந்த சுவிட்சும் என்னிடம் இல்லை.
சபாநாயகருக்கு மைக்கை ஆன்-ஆஃப் செய்யப் பட்டன் இருப்பதில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகராகச் செயல்படும்போது, அவர்களுக்கும் இந்த உண்மை தெரியும். பேச அனுமதிக்கப்பட்ட உறுப்பினருக்கு மட்டுமே மைக் இயக்கப்படும். அவை நடவடிக்கைகளில் பங்கேற்கத் தயங்கும் உறுப்பினர்களை நான் எப்போதும் ஊக்குவிப்பதே வந்துள்ளேன். சபையின் விதிகள், நடைமுறைகளுக்குள் ஒவ்வொரு உறுப்பினரும் கருத்துக்களை வெளிப்படுத்துவதை உறுதி செய்யத் தான் எப்போதும் முயல்கிறேன்" என்று அவர் உருக்கமாகப் பேசினார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications