உங்க மைக் மட்டும் தான் வேலை செய்யல.. ராகுல் காந்தியை கிண்டல் செய்த சபாநாயகர் ஓம்பிர்லா
டெல்லி: எதிர்க்கட்சி எம்பி கேசி வேணுகோபால் பேசும் போது, மைக் வேலை செய்கிறதா? என்று ராகுல் காந்தி கேட்ட போது, உங்கள் மைக் மட்டும்தான் வேலை செய்யவில்லை என அவரை கலாய்க்கும் வகையில் சபாநாயகர் ஓம் பிர்லா பேசினார். ராகுல் காந்தி இதற்கு முன்பாக பலமுறை வைத்த குற்றச்சாட்டுகளை நினைவுகூரும் விதமாக ஓம் பிர்லா இவ்வாறு கூறியதாக தெரிகிறது.
மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 மசோதாக்களை தாக்கல் செய்ய நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் கூடியுள்ளது. இந்தக் கூட்டம் நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. சிறப்பு கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று அவையில் அனல் பறந்தது. மசோதாவை அறிமுகம் செய்யும் முன்பே உறுப்பினர்கள் இடையே காரசeர வாதங்கள் நடைபெற்றன.

இந்த பரபரப்புக்கு நடுவே, ராகுல் காந்தியை ஜாலியாக கலாய்த்து சபாநாயகர் ஓம்பிர்லா பேசினர். இந்த காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இது குறித்த விவரங்கள் வருமாறு:- லோக்சபா இன்று கூடியதும், காங்கிரஸ் எம்பி வேணுகோபால் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதவை 2024 ல் அமல்படுத்தாமல் இவ்வளவு தாமதமாக தற்போது திடீரென கொண்டு வருவதன் நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்த மசோதா விவாத்திற்கே இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதற்குள் மசோதாவில் உள்ள அம்சங்கள் பற்றி எப்படி விவாதிக்க முடியும்" என்று கேட்டார். அப்போது சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றி கேசி வேணுகோபாலிடம் எடுத்துரைத்தார். அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ஒரு எம்பி, எதிர்க்கட்சி உறுபினர்களின் மைக்குகள் வேலை செய்கின்றனவா? என்று சந்தேகம் கிளப்பினார்.
இதை கவனித்த ராகுல் காந்தி, மைக்கை பார்த்து வேலை செய்கிறதா? என்ற ரீதியில் கேட்டார். உடனே சபாநாயகர் ஓம் பிர்லா, மைக் ஆனில்தான் இருக்கிறது. உங்களுக்கான மைக் மட்டுமே வேலை செய்யாது" என்று ஜோக் அடித்தார். இதனால், அவையில் லேசான சிரிப்பலை ஏற்பட்டது. இந்தக் காட்சிகள்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேசும் போது மைக்குகள் ஆப் செய்யப்படுவதாக ராகுல் காந்தி இதற்கு முன்பாக குற்றம் சாட்டியிருந்தார். இதனை சுட்டிக்காட்டும் விதமாகவே சபாநாயகர் ஓம்பிர்லா மேற்கண்டவாறு பேசியுள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு ராகுல் காந்தி லண்டன் சென்று இருந்தார்.
அப்போது அங்கு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்றும் நான் பேசும் போது எனது மைக்குகள் பல முறை ஆப் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறினார். கடந்த 2024 ஆம் ஆண்டும் இதே குற்றச்சாட்டை ராகுல் காந்தி அவையில் முன்வைத்தார். அப்போது கடும் அமளி ஏற்பட்டு இருந்தது.
-
லம்பாக அமவுண்டை அமுக்கிய தலைகள்.. ராகுலுக்குப் போன மெசேஜ்! அடுத்தடுத்த ஆக்ஷனுக்கு தயாராகும் காங்.,! -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்!












Click it and Unblock the Notifications