Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக முடிவு என்ன? பிரிந்த நண்பர்களும் பாஜக கூட்டணிக்கு வரலாம்.. மீண்டும் அழுத்திய அமித்ஷா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் பாஜக 400 தொகுதிகளில் வெல்ல டார்க்கெட் வைத்துள்ளோம். பாஜக கூட்டணியில் புதிய கட்சிகள் இணையலாம். பிரிந்த நண்பர்கள் மீண்டும் கூட்டணிக்கு வரலாம். அவர்களுக்கான கதவு என்பது திறந்து வைக்கப்பட்டுள்ளது மீண்டும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழுத்தி கூறியுள்ளார். இதனால் அதிமுக மனம்மாறுமா? இல்லையா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. 2014, 2019 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட அதிக இடங்களில் வாகை சூடும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.

Loksabha Election 2024: Amit Shah again calls for other parties to join NDA alliance

இந்த தேர்தலில் 400 நாடாளுமன்ற தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற ஆவலில் பாஜக தனது தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தி வருகிறது. இந்நிலையில் தான் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் என்பது நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு செயல்படுத்தப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை வெல்லும். மாறாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். நாங்கள் உண்மையிலேயே குடும்ப கட்டுப்பாட்டை நம்புகிறோம். ஆனால் அரசியலில் எங்களின் கூட்டணியில் குடும்ப கட்டுப்பாட்டை நாங்கள் கடைப்பிடிப்பது இல்லை.

எங்களது கூட்டணி என்பது வளர வேண்டும். புதிய கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு வந்தால் நாங்கள் வரவேற்போம். அவர்களுக்கான கதவு திறந்து உள்ளது. ஜனசங்க காலத்தில் இருந்தே எங்களின் சித்தாந்தம் மாறாமல் அப்படியே உள்ளது. எங்கள் சித்தாந்தத்தை ஏற்று கூட்டணியில் சேர விரும்புவோர் தாராளமாக வரலாம். பஞ்சாப்பில் செயல்பட்டு வரும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை என்பது நடத்தப்பட்டு வருகிறது'' என்றார். சுக்பீர் சிங் பாதல் தலைமையிலான சிரோன்மணி அகாலிதளம் பஞ்சாப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்சி கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தது. ஆனால் அதன்பிறகு 3 விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து அந்த கட்சி விலகியது.

இந்த வேளையில் ஆந்திராவில் யாருடன் கூட்டணி என்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. தெலுங்கானாவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் தற்போது பாஜகவுடன் நெருக்கமாக உள்ளன. இரு கட்சியின் தலைவர்களும், பாஜக தலைவர்களை சந்தித்துள்ளனர். இதனால் எழுந்த இந்த கேள்விக்கு அமித்ஷா, ‛‛சிறிது காலம் காத்திருங்கள். அதன்பிறகு அனைவருக்கும் அனைத்தும் தெளிவாக புரியும்'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‛‛எங்கள் கூட்டணிக்கு பல கட்சிகள் வந்துள்ளன. பல கட்சிகள் போய் உள்ளன. எங்கள் கூட்டணியை விட்டு கட்சிகள் வெளியேற 2 காரணங்கள் தான் உள்ளன. ஒன்று சில குறிப்பிட்ட சம்பவத்தை கூறி வெளியேறுகின்றன. இல்லாவிட்டால் அந்த குறிப்பிட்ட மாநிலத்தின் அரசியல் சமான்பாட்டில் ஏற்பட்ட பிரச்சனையால் வெளியேறுகின்றனர். ஆனால் பாஜக எந்த கட்சியில் இருந்தும் பிரிந்து செல்லவில்லை. சொல்லப்போனால் பாஜக செல்வாக்கான இடங்களிலும் கூட கூட்டணி தர்மத்தை மதித்து நடக்கிறோம்’’ என்றார்.

அமித்ஷாவின் இந்த கருத்து என்பது பிரிந்துபோன நண்பர்கள் கூட்டணிக்கு வரலாம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கட்சி, உத்தர பிரதேசத்தில் ஆர்எல்டி கட்சிகள் ‛இந்தியா' கூட்டணியில் இருந்து பிரிந்து பாஜகவில் இணைந்துள்ளன. அதேபோல் பாஜக கூட்டணியில் இருந்த பிரிந்து போன ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் இப்போது நெருக்கம் காட்டி வருகிறது. சிரோன்மணி அகாலிதளம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம் பிரிந்து போன கூட்டணி கட்சிகளை மீண்டும் ஒன்றிணைக்க பாஜக முயன்று வருவது உறுதியாகி உள்ளது.

உள்துறை அமைச்சர் பிற கட்சிகளை பாஜக தலைமையிலான கூட்டணிக்கு அழைப்பது இது முதல் முறையல்ல. சில நாட்களுக்கு முன்பும் அவர் இந்த அழைப்பை விடுத்து இருந்தார். தமிழகத்தை பொறுத்தமட்டில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமைத்து இருந்தன. ஆனால் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துள்ளது. மேலும் எந்த காரணம் கொண்டும் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி உள்பட பல அதிமுக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகயை சூழலில் தான் மீண்டும் அமித்ஷா பாஜக கூட்டணியில் பிற கட்சிகள் இணையலாம் என தெரிவித்துள்ளார். அரசியலை பொறுத்தமட்டில் எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இந்நிலையில் தான் அதிமுகவின் நிலைப்பாடு மாறுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் நடைபெற உள்ள 2024 நாடாளுமன்ற தேர்தல் பற்றி அமித்ஷா கருத்து தெரிவிக்கையில், ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தல் என்பது என்டிஏ மற்றும் ‛இந்தியா' கூட்டணிக்கு இடையேயான தேர்தலாக இருக்காது. மாறாக வளர்ச்சி மற்றும் பிரகாசமான எதிர்காலம் கொடுக்கும் கூட்டணிக்கும், வெறும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும் கூட்டணிக்கும் இடையேயான தேர்தலாக தான் அமையும்'' என அமித்ஷா கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+