தென்னிந்தியா: 129 தொகுதிகள்-பாஜக அதிகபட்சம் 25 சீட்; 100 தொகுதிகளில் தோல்வி: Times Now 'ஷாக்' சர்வே!
டெல்லி: லோக்சபா தேர்தலில் 5 தென்னிந்திய மாநிலங்களின் 129 தொகுதிகளில் பாஜக தலைமையிலான கூட்டணி மிக அதிகபட்சமாக 25 இடங்களில்தான் வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்கிறது டைம்ஸ் நவ் டிவியின் கருத்து கணிப்பு.
லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் டிவி கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய மாநிலங்களில் கர்நாடகாவில்தான் பாஜக அதிகமான் இடங்ளைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய 5 தென்னிந்திய மாநிலங்களில் பாஜக மிக அதிகபட்சமாக வெறும் 25 இடங்களில்தான் வெல்லக் கூடிய சாத்தியம் இருக்கிறதாம். சுமார் 100 தொகுதிகளில் பாஜக பெரும் தோல்வியைத்தான் சந்திக்கும் என்கிறது டைம்ஸ் நவ் சர்வே.
தென் மாநிலங்களில் மொத்த லோக்சபா தொகுதிகள் 129
தமிழ்நாடு : 39
கேரளா: 20
கர்நாடகா: 28
தெலுங்கானா: 17
ஆந்திரா : 25
டைம்ஸ் நவ் சர்வே படி, தென் மாநிலங்களில் லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?
தமிழ்நாட்டில் மொத்தம் 39 தொகுதிகள்
திமுக கூட்டணி- 30 முதல் 34 இடங்கள்
திமுக 20 முதல் 24 இடங்கள்
காங்கிரஸ் 9 முதல் 11 இடங்கள்
அதிமுக 4 முதல் 8 இடங்கள்
பாஜக 0 முதல் 1
ஆந்திரா மொத்த தொகுதிகள் -25
ஒய்.எஸ்.ஆர். காங்கிர 24 முதல் 25 இடங்கள்
தெலுங்குதேசம் 0 முதல் 1 இடம்
ஜனசேனா கட்சி- 0
ஜேஎஸ்பி- 0
பாஜக கூட்டணி- 0
லோக்சபா தேர்தல்: கேரளாவில் "இந்தியா" கூட்டணி சுனாமி அலை- 79.20% வாக்குகள் அள்ளுமாம்-டைம்ஸ் நவ் சர்வே
தெலுங்கானாவில் மொத்த தொகுதிகள்: 17
பிஆர்எஸ் கட்சி 9 முதல் 11 இடங்கள்
"இந்தியா" கூட்டணி 3 முதல் 4 இடங்கள்
பாஜக கூட்டணி 2 முதல் 3 இடங்கள்
கர்நாடகாவில் மொத்த தொகுதிகள்: 28
பாஜக கூட்டணி : 18-20
"இந்தியா" கூட்டணி : 07-09
மதச்சார்பற்ற ஜனதா தளம் 0-1
கேரளாவில் மொத்த தொகுதிகள் 20
"இந்தியா" கூட்டணி- 18 முதல் 20 இடங்கள்
பாஜக கூட்டணி - 01
இதர கட்சிகள் -0.












Click it and Unblock the Notifications