வரலாற்றில் முதல் முறை.. சபாநாயகர் பதவிக்கு தேர்தல்.. கட்சி எம்பிக்களுக்கு காங்கிரஸ் போட்ட உத்தரவு
டெல்லி: லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எம்.பிக்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதேபோல பாஜகவும் தனது எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது.
18-வது லோக்சபாவின் முதலாவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுவாக லோக்சபா சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும்.

இந்த நிலையில் நேற்று வரை லோக்சபா சபாநாயகர் பதவி தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் முடிவடையும் நிலையில் எதிர்க்கட்சிகளுடன் மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப் பேச்சுவார்த்தையில் திமுகவின் டிஆர் பாலு, காங்கிரஸின் கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குடனான பேச்சுவார்த்தையில் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு தர வலியுறுத்தப்பட்டது. இதனை மத்திய அரசு தரப்பு ஏற்க மறுத்தது. இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் லோக்சபா சபாநாயகர் வேட்பாளராக ஓம் பிர்லா நிறுத்தப்படுகிறார். இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவைச் சேர்ந்த கொடிக்குன்னில் சுரேசை (காங்கிரஸ்), லோக்சபா சபாநாயகர் தேர்தலில் களமிறக்கி இருக்கிறது. லோக்சபா சபாநாயகர் பதவிக்கான தேர்தலில் கொடிக்குன்னில் சுரேஷ் தற்போது வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
லோக்சபா சபாநாயகர் பதவிக்கு முதல் முறையாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தனது எம்.பிக்கள் அனைவருக்கும் கொறடா உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. அதேபோல பாஜகவும் தனது எம்பிக்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதில் நாளை அனைத்து எம்பிக்களும் அவைக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கொறடா கொடிக்குன்னில் சுரேஷ், கட்சி எம்பிக்களுக்கு பிறப்பித்த்த உத்தரவில் நாளை மிக முக்கியமான விவகாரம் அவையில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. எனவே காலை 11 மணியில் இருந்து அவை ஒத்தி வைக்கப்படும் வரை அனைத்து எம்.பிக்களும் அவையில் தவறாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications