டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் புயல்?.. யார் பெயர் வைத்தது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: தெற்கு அந்தமான் கடலில் வரும் டிசம்பர் 3ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒரு வேளை இந்த காற்றழுத்தம் புயலாக மாறினால் இதற்கு பெயர் ஜவாத் என்று சூட்டப்படும்.

Recommended Video

    Chennai-க்கு நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. நாளை வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    அதே போல் டிசம்பர் 1ஆம் தேதி அரபிக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     விட்டாச்சு லீவ்.. தொடர் மழை காரணமாக.. இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டாச்சு லீவ்.. தொடர் மழை காரணமாக.. இந்த மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    அரபிக் கடல்

    அரபிக் கடல்

    அந்தமான் மற்றும் அரபிக் கடல் பகுதியில் அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாவதால் தமிழகத்தில் மேலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.

    வடமேற்கு திசை

    வடமேற்கு திசை

    பின்னர் 48 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் அது நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயலுக்கு ஜாவத்

    புயலுக்கு ஜாவத்

    ஒரு வேளை அது புயலாக மாறினால் அந்த புயலுக்கு ஜாவத் என பெயரிடப்படும். இது அநேகமாக ஒடிஸா, வங்கதேசம் அல்லது வடஇந்திய மாநிலங்களை நோக்கி செல்லலாம் என தெரிகிறது. அதிலும் இது ஒடிஸா கடலோரத்தை நோக்கி செல்வதால் பெர்ஹாம்பூர் - பூரி இடையே கரையை கடக்கும் என தெரிகிறது.

    ஆந்திரா

    ஆந்திரா

    ஆனால் இந்த புயலின் நகர்வு ஆந்திர மாநில விசாகப்பட்டினத்தை நோக்கியும் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். எனவே இந்த புயலானது டிசம்பர் 3 முதல் 5 ஆம் தேதிக்கு வடக்கு ஆந்திர அல்லது தெற்கு ஒடிஸா இடையே கரையை கடக்கும் என ஸ்கைமெட் தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு ஜாவத் என சவுதி அரேபியா பெயரிட்டுள்ளது. ஜாவத் என்றால் தாராள மனப்பான்மை என்பது பொருளாகும்.

    English summary
    Low Pressure Likely To Become Cyclone Jawad Over Bay Of Bengal by December 3 will impact Odisha, Bangladesh or North East India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X