மொத்த இந்தியாவும் முடங்கப்போகுது.. தீவிரமாகும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. மோடியை சந்தித்த பூரி - ஜெய்சங்கர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் நம் நாட்டில் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டில் பயன்படுத்தப்படும் கேஸில் 62 சதவீதம் இறக்குமதி செய்யப்படும் நிலையில் தற்போது கேஸ் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் பிரதமர் மோடி அவசரமாக பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதற்கிடையே தான் நம் நாட்டில் நிலவும் கியாஸ் பற்றாக்குறையின் பின்னணி பற்றி டேட்டா வாரியாக இங்கு பார்க்கலாம்.

இஸ்ரேல், அமெரிக்காவின் தொடர் தாக்குதலால் ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ளது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா, சீனா உள்பட அருகே உள்ள பிற நாடுகளுக்கு கச்சா எண்ணெய், கேஸ் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் வரும்.

தற்போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் நம் நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய தினத்தை ஒப்பிடும்போது இன்று நிலைமை மோசமாகி உள்ளது. மும்பை, கொல்கத்தா, பெங்களூர், சென்னை, கோவை உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆலோசனை

இந்நிலையில் தான் பிரதமர் மோடி கேஸ் தட்டுப்பாடு குறித்து முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பிரதமர் மோடி தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழலின் தாக்கத்தில் இருந்து மக்களுக்கு தாமதமின்றி பெட்ரோல், டீசல், கேஸ் விநியோகம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பிற நாடுகளில் இருந்து கேஸ் , கச்சா எண்ணெய் வாங்கலாமா? சாத்தியம் இருக்கிறதா? என்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நம் நாட்டில் உள்ள எண்ணெய் உற்பத்தி நிலையங்களில் கேஸ் தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

62 சதவீதம் கேஸ் இறக்குமதி

மேலும் இந்த பிரச்சனைக்கு உடனடியாக மத்திய அரசு தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் வரும் நாட்களில் மொத்த இந்தியாவும் முடங்கும் அபாயம் உள்ளது. ஏனெனில் நம் நாடு மொத்த எல்பிஜி கேஸில் 62 சதவீதத்தை இறக்குமதி தான் செய்கிறது. இதில் குறிப்பாக சவுதி அரேபியா போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து தான் 85 முதல் 90 சதவீதம் வரை கியாஸ் இறக்குமதி செய்யப்படுகிறது. தற்போது ஹார்முஸ் ஜலசந்தி மூடல் காரணமாக சவுதி உள்பட பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கிடைக்கும் சப்ளை தான் பாதிக்கப்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் குறைப்பு

தற்பாதைய சூழலில் ஆண்டுக்கு சுமார் 31.3 மில்லியன் டன் எல்பிஜி கேஸ் பயன்படுத்தி வருகிறது. இதில் 87 சதவீதம் வீடுகளிலும், 13 சதவீதம் ஹோட்டல், உணவகங்கள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது கேஸ் பற்றாக்குறை இருப்பினும் வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் சில கட்டுப்பாடுகளுடன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. முன்பதிவு 21 நாட்களில் இருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் வணிகத்துக்கான சிலிண்டர் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளது. தாமதமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.

முடங்கும் அபாயம்

இதனா் பெங்களூர், மும்பை, சென்னை, கோவை, கொல்கத்தா உள்பட பல நகரங்களில் ஹோட்டல்களில் உணவு பட்டியல்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஹோட்டல்கள் மூடப்படும் அபாயம் வரும்.

அதேபால் தற்போது சென்னையில் ஓலா, ஊபர், ஆட்டோ, கார் ஓட்டுநர்களுக்கு எல்பிஜி கேஸ் கிடைப்பது இல்லை. பிற நகரங்களிலும் இந்த பிரச்சனை உள்ளது. இதனால் உடனடியாக தீர்வு காணாவிட்டால் வீட்டு பயன்பாட்டுக்கு கூட வரும் நாட்களில் பிரச்சனை ஏற்படலாம். இதனால் இந்தியா முடங்க வாய்ப்புள்ளது என்று பலரும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எப்போது சரியாகும்?

ஈரானை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு அமெரிக்கா, இஸ்ரேல் தாக்கியபோது ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது கிடையாது. ஆனால் தற்போது ஈரான் தனது உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியை பறிகொடுத்துவிட்டது. இதனால் தான் தினமும் உலகில் 20 சதவீதம் கச்சா எண்ணெய் - கேஸ் சப்ளை நடக்கும் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளது. தற்போது வரை போர் தொடர்வதால் அந்த கடல்வழிப்பாதையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழலில் பிரச்சனைக்கு தீர்வு என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது.

ஒருவேளை போர் மூடிவுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்கா ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்றி வர்த்தக கப்பல்களை அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கேஸ் சப்ளை பாதிப்பு சரியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+