ஏழைகளுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது! சிலிண்டர் விலை உயர்வு பற்றி ராகுல்காந்தி ட்விட்
டெல்லி: ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனுக்கான ஆட்சியை காங்கிரஸ் மட்டுமே வழங்குகிறது என சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து ராகுல்காந்தி கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் உத்தர பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலுக்கு பிறகு படிபடியாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்க துவங்கின.

ரூ.50 உயர்வு
தற்போது கடந்த ஒருமாதமாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் அடையவில்லை. இருப்பினும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரித்து வருகின்றன. நேற்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் ரூ.965க்கு விற்பனை செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.1000யை கடந்து ரூ.1,015 விற்பனை செய்யப்படுகிறது.

2வது முறையாக உயர்வு
இதற்கு முன்பு மார்ச் 22ம் தேதி வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த மாத துவக்கத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ.104 உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 508 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ராகுல்காந்தி விமர்சனம்
இதற்கு மத்திய பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. நேற்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவலா குற்றம்சாட்டினர். இன்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார். அதில், 2014 காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சிலிண்டர் விலையையும்,பாஜக ஆட்சியின் சிலிண்டர் விலையையும் ஒப்பிட்டுள்ளார். இதுகுறித்து ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
Recommended Video


ஏழைகளுக்கான ஆட்சி காங்கிரஸ் மட்டுமே
‛‛சமையல் எரிவாயு சிலிண்டர் 2014 காங்கிரஸ் ஆட்சியில் ரூ.410 ஆகவும், மானியம் ரூ.827 ஆகவும் இருந்தது. 2022 பாஜக ஆட்சியில் ரூ.999 ஆகவும், மானியம் பூஜ்ஜியமாகவும் இருந்தது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 2 சிலிண்டர் வாங்குவதற்கான காசை தற்போது ஒரு சிலிண்டருக்கு கொடுக்கும் நிலை உள்ளது. இதன்மூலம் இந்தியாவில் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் நலனுக்கான ஆட்சியை வழங்குவது என்பது காங்கிரஸ் கட்சி மட்டும் தான். இதுதான் நமது பொருளாதார கொள்கையின் அடிப்படையாகும்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications