கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... தண்ணீர் ஊற்றி சரி செய்யும் டெலிவரி ஊழியர்! கொடுமையை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. முன்பெல்லாம் எப்போது வேண்டுமானாலும் சிலிண்டரை புக் செய்துக்கொள்ளலாம் என்கிற நிலை இருந்தது. இப்போது இதற்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், டெலிவரி ஊழியர் ஒருவர், கேஸ் சிலிண்டருக்குள் தண்ணீரை ஊற்றி நிரப்பும் வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சில டெலிவரி ஊழியர்கள் வீட்டு விநியோக சிலிண்டர்களிலிருந்து கொஞ்சமாக கேஸை எடுத்துவிட்டு, அதற்கு பதில் தண்ணீரை நிரப்பி கொடுக்கின்றனர் என்று குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

LPG

என்னங்க நடக்குது?

ஈரான் போர் மொத்த உலகத்தையும் புரட்டி போட்டு இருக்கிறது. குறிப்பாக இந்தியா, எல்பிஜி விஷயத்தில் பயங்கரமாக அடிவாங்கியிருக்கிறது. காரணம், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதுதான். இதன் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய எல்பிஜி சப்ளை அப்படியே முடங்கியிருக்கிறது. எனவே கை வசம் இருக்கும் எல்பிஜியை மத்திய அரசு பார்த்து பார்த்து விநியோகித்து வருகிறது.

எல்பிஜிக்கு பதில் தண்ணீர்

இந்த சமயத்தை பயன்படுத்திக்கொள்ள விரும்பும் சில விநியோகஸ்தர்கள், சிலிண்டர்களை பதுக்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது அவ்வப்போது கண்டுபிடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், மறுபுறம் டெலிவரி செய்யும் நபர்கள், சிலிண்டர்களிலிருந்து கேஸை எடுத்துக்கொண்டு குறைவாக கொடுக்கின்றனர். இந்த விஷயம் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, எடையை ஈடுகட்ட தண்ணீரை நிரப்பி கொடுக்கிறார்கள்.

ஷாக் வீடியோ

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இப்படியான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. லக்னோவின் விகாஸ் நகரில், டெலிவரி ஊழியர் ஒருவர் சிலிண்டருக்குள் தண்ணீரை நிரப்பும் வீடியோ சோஷியல் மீடீயாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

வழக்கமாக இப்படி தண்ணீர் நிரப்பி கொடுத்தால் அதை கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் கேஸ் சிலிண்டரில் இருக்கும் திரவ எரிவாயு தண்ணீர் நிரப்பப்படும்போது மேலே வந்துவிடும். எனவே அடுப்பு சாதாரணமாக எரிவதை போலத்தான் தெரியும். ஆனால், ஈரப்பதம் அத்துடன் சேர்ந்து வெளியாகி அடுப்பை நாசம் செய்துவிடும். தண்ணீர் கலந்த சிலிண்டர் எனில், தீ நீல நிறமாக இல்லாமல் மஞ்சள் நிறமாக எரியும்.

என்ன ஆகும்?

தவிர, சிலிண்டர் உள்ளே துரு பிடித்து, காலப்போக்கில் சிறிய துளைகள் உருவாகிய லீக்கேஜ் ஏற்படலாம். இதனால் பெரும் ஆபத்து ஏற்படும். இதுதவிர அடுப்பு பழுதாகும், ரெகுலேட்டர் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+