தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு.. கூடுதல் தடுப்பூசிகள்.. டெல்லியில் மா.சு. வைத்த கோரிக்கைகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி மத்திய கல்வித்துறை அமைச்சர் அவர்களை டெல்லியில் சந்தித்து இந்த ஆண்டு "நீட்" தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தினோம் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

நேற்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், இன்று (நேற்று) நான் டெல்லி செல்கிறேன். அங்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரைச் சந்திக்க உள்ளேன்.

Ma Subramanian will meet to Union Health Minister in Delhi

அப்போது, தடுப்பூசியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும், எச்.எல்.எல் தடுப்பூசி மையத்தை (செங்கல்பட்டு தடுப்பூசி மையம்) உடனடியாகத் திறக்க வேண்டும், இதனால் இப்போதுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டைப் போக்க உதவியாக இருக்கும் என்கிற அடிப்படையில் வலியுறுத்துவோம்.

மொத்தம் 13 கோரிக்கைகளை வைக்க உள்ளோம். எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி திறப்பு, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டிய அந்த அவசியத்தையும் எடுத்துச் சொல்லவுள்ளோம்" என்றார்.

இதன்படியே டெல்லி சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன். மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசினார். அவரிடம் "நீட்" தேர்விற்கு தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தினார்.

Ma Subramanian will meet to Union Health Minister in Delhi

இதை தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் அவசிய தேவைகள் குறித்து வலியுறுத்தினார். கூடுதல் தடுப்பூசிகள் வேண்டும் என்றும், எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி குறித்தும் கோரிக்கை வைத்தார் . மொத்தம் 13 கோரிக்கைளை வலியுறுத்தி அமைச்சர்களை மா சுப்பிரமணியன் சந்தித்து பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+