மதுரைக்கு மெட்ரோ இப்போ தேவையேயில்ல.. கோவையில் நிறைய சிக்கல் இருக்கு! மத்திய அரசு சொன்ன விளக்கம்!
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிக்கையை, மத்திய அரசு தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில், திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் இந்த திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளது. எம்பி கனிமொழி எம்விஎன் சோமு எழுப்பிய கேள்விக்கு 5 காரணங்களை கூறியுள்ளார் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணை அமைச்சர் டோகன் சாஹு.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் அடுத்த கட்ட நகரங்களான மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதை அடுத்து இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்தது. மதுரையில் திருமங்கலம் ஒத்தக்கடை இடையே சுமார் 31 கிலோமீட்டர் தூரத்திற்கும், கோவை அவிநாசி சாலையிலிருந்து கருமத்தம்பட்டி வரை, உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் வலியம்பாளையம் பிரிவு வரை 39 கிலோமீட்டர் தூரத்திற்கும் இந்த மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

மதுரை கோவை மெட்ரோ
தொடர்ந்து ஆய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக தமிழக அரசு அனுப்பியது. மத்திய அரசின் ஒப்புதல் விரைவில் கிடைத்துவிடும் என்பதால் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகளும் மதுரை மற்றும் கோவையில் ஆய்வை முடித்தனர். இந்த நிலையில் இந்த இரண்டு மெட்ரோ ரயில் திட்டங்களின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் திருப்பி அனுப்பியது.
திட்ட அறிக்கை
20 லட்சத்திற்கும் மேல் மக்கள் வசிக்கும் நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், கோவையில் தற்போது 15 லட்சமும் மதுரையில் 15 லட்சம் மக்கள் தான் வசிக்கிறார்கள் என்பதால் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடியாது எனவும், இரு நகரங்களிலும் தனி பாதையில் பேருந்துகளை இயக்கலாம் அல்லது பிஆர்டிஎஸ் போன்ற திட்டத்தை செயல்படுத்தலாம் என பரிந்துரைத்ததாகவும் தகவல் வெளியானது.
கனிமொழி கேள்வி
இந்நிலையில் இந்த திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கியுள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கோவை மதுரை மெட்ரோ ரயில் நிலையங்களை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக நிராகரித்தா அல்லது மறுக்கப்பட்டதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு கேள்வி எழுப்பினார்.
டோகன் சாஹு
இதற்கு பதில் அளித்த மத்திய இணையமைச்சர் டோகன் சாஹு," மதுரை மெட்ரோ திட்டங்களுக்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் இயக்க திட்டம் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு அனுப்பி இருந்தது. இவை குறித்து பரிசீலிக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் அவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. கோவிலைப் பொறுத்தவரை குறைந்த சராசரி பயண தூரமும் சாலைகளின் வேகம் காரணமாக மெட்ரோ திட்டத்தை செயல்படுத்துவதில் மிகக் குறைந்த நேர சேமிப்பு தான் இருக்கும். அதனால் கோவை மக்கள் மெட்ரோக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
பயணிகள் எண்ணிக்கை
அதே போல மாநகராட்சி பகுதியுடன் மக்கள் தொகை உள்ளிட்ட சில காரணிகளும் இந்த திட்டத்தின் பரிசீலனையின் போது ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதியை விட ஐந்து மடங்கு பெரிதாக உள்ள உள்ளூர் திட்டமிடல் பகுதியில் வசிப்பவர்கள் மெட்ரோவை பயன்படுத்துவதில்லை. இங்கு 34 கிலோமீட்டர் தூரத்திற்கு வழித்தடம் அமைக்கப்படும் நிலையில் பயணிகள் எண்ணிக்கை 5.90 லட்சம் இருக்க வேண்டும். ஆனால் சென்னை மெட்ரோவில் 55 கிலோமீட்டர் தொலைவிற்கு பயணிகள் எண்ணிக்கை 4 லட்சம் தான் இருக்கிறது. அதைவிட இது அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்க.
மதுரை மெட்ரோ
மேலும் பல இடங்களில் ரயில் நிலையங்களை தீர்மானிப்பதும் வழி உரிமை பிரச்சனை இருப்பதாலும். இந்த திட்டங்கள் சாத்தியமில்லை. மதுரையை பொறுத்தவரை செலவு குறைந்த விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பே போதுமானது என்பதால் இந்த திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.
-
சென்னையில் நடக்கும் 500 மீட்டர் மேஜிக்.. குறி வைக்கப்பட்ட 41 இடங்கள்.. மக்களுக்கு அடிக்கும் ஜாக்பாட் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications