ரயில் திட்டத்தை கைவிட யார் காரணம்? மாறி மாறி பேசிய மத்திய அரசு! விளாசிய திமுக.. பறந்து வந்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை - தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் கைவிடப்பட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இரைச்சல் காரணமாக கேள்வியை தெளிவாக கேட்க முடியவில்லை என அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்தார். இதற்கிடையே இது தொடர்பாக தெற்கு ரயில்வேயும் விளக்கம் அளித்துள்ளது.

மதுரை தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது.

ashwini vaishnaw railway bjp

இந்த நிலையில் அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடி புதிய அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு நில எடுப்பு செய்து ஒப்படைக்க வேண்டும் என மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதை அடுத்து இரண்டு பகுதிகளாக நில எடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்கான நிர்வாக அனுமதியும் வழங்கி தமிழ்நாடு அரசால் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் உள்ளிட்ட ஏனைய இரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர்," மதுரை தூத்துக்குடி இடையே ரயில்வே வழித்தடங்கள் அமைக்கும் திட்டம் மாநில அரசின் கோரிக்கையால் கைவிடப்பட்டதாக" கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு அரசு கடுமையான கண்டனம் தெரிவித்தது.

மேலும் மதுரை தூத்துக்குடி தமிழக இரயில்வே திட்டத்தை கைவிடுமாறு தமிழ்நாடு அரசு ஒரு போதும் கூறவில்லை, தமிழ்நாட்டின் திட்டம் என்றாலே ஒரவஞ்சனையுடன் பார்த்து- புறக்கணிக்கும் மனப்பான்மையில் பாஜக அரசு செயல்படலாமா? எனவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இத்திட்டத்தை ஒன்றிய அரசு உடனே நிறைவேற்றிட வேண்டும் என தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையும் கூறி இருந்த நிலையில் அஸ்வினி வைஸ்ணவ் திடீரென தனது குற்றச்சாட்டை மாற்றிக்கொண்டார். இது தொடர்பாக பேசிய அவர் ரயில் பாதை திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது ரயில் பெட்டி தயாரிப்பு ஆலையில் இரைச்சல் காரணமாக தனக்கு கேள்வி தெளிவாக கேட்கவில்லை எனவும் தவறாக புரிந்து கொண்டதால் அவ்வாறு பதில் அளித்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இது தொடர்பாக தெற்கு ரயில்வே விளக்கம் அளித்து இருக்கிறது. அதில்," மதுரை தூத்துக்குடி புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் எந்த சிக்கலும் கிடையாது. எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த ரயில் திட்டத்திற்கான நில ஒதுக்கீடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் விதமாகவே இருக்கிறது. மதுரை தூத்துக்குடி ரயில் திட்டம் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சத்தம் அதிகமாக இருந்ததால் தனுஷ்கோடி ரயில் திட்டம் குறித்து கேட்கப்பட்டதாக நினைத்து அது தொடர்பாக அமைச்சர் பதில் அளித்தார்.

எனவே அமைச்சர் சொன்ன பதில் தனுஷ்கோடி ரயில் திட்டம் குறித்தது மட்டுமே. அந்த திட்டம் தொடர்பாகத் தான் நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனை இருப்பதாக தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த விளக்கத்தை மதுரை தூத்துக்குடி குறித்த திட்டத்திற்கான கேள்வி என நினைத்து மத்திய அமைச்சர் தவறுதலாக பதில் அளித்ததால் குழப்பம் ஏற்பட்டது" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+